நிதர்சனம்

ஓராயிரம் முறை எதிர்கொள்கிறோம், ஒவ்வொரு அணுவையும்...
ஒட்டு மொத்த அழகும் அதில் அடங்கியுள்ளது என்பதை அறியாமல்!!!
இல்லாத ஒன்றில் இதயம் தொலைக்கிறோம், இருக்கும் அழகை ரசிக்காமல்!!!
முகமூடியிட்டு வாழ்கிறோம்,
மூடிய விழிகளுக்குள் முடங்கிய உண்மைகளை உணராமல்...!!!
நித்தமும் கவலையுடன் வாழ்கிறோம்,
இது நிச்சயமில்லா வாழ்க்கை என்ற நிதர்சனத்தை நினைவில் கொள்ளாமல்...!!!