இல்லம் சங்கீதம்
காலையில் எழுந்து
நீ என்னைக் கழுவி
ஊற்றத் தொடங்கும் போதே
களை கட்டுகிறது
கல்யாணி
பர பரத்து
சமையல் கட்டில்
நீ போட்டுடைக்கும்
பாத்திரங்கள் எழுப்பும்
ஓசைகளின் பண்
நட்ட பாடை
குளித்து முடிக்கு முன்னே
சப்பாத்தியா உப்புமாவா
என்ற உன் விவாதத்தில்
கிளம்புகிறது வயிற்றில் புகை
பந்துர வாளியாய்
போகட்டும் புறப்படுவோம் என்று
வண்டியை எடுத்து வாசல்
வரை சென்ற என்னை
வழிமறிக்க வைக்குதடி
உன் மோகனப் புன்னகை
வீடு வரும் போது
மல்லிகை அல்வா
சாத்துக் குடி தேன் முறுக்கு
என தாளம் தப்பாமல்
பட்டியல் இடும் போது
சமைந்து போகிறது மனது
சங்கராபரணமாய்
எல்லாம் முடித்து இரவு நிம்மதியாய்
தூங்கலாமென்றால்
ஏழிசை கீதமே
எனக்கொரு ஜீவன் நீயென்று
பாடத் தொடங்குகிறாய்
கரையோக்கியோடு
நீயே ஒரு இராக மாலிகா
உனக்கேன் ஒரு இராகம் மல்லிகா
உன் காதுகளுக்கு கேட்காமல்
திட்டிக் கொண்டு
தூங்கி விடுகிறேன்
அடுத்த நாள் கேட்க
இருக்கும் மல்லாரிக்காக