நிலவுடன் ஓர் நேர் காணல்
நிலவே வளர்வதேன் ?
தேய்வதற்காக !
தேய்வதேன் ?
வளர்வதற்காக !
வேடிக்கையான பதில் !!
ஒரு நாள் இல்லாமல் போய்விடுகிறாயே
அது ஏன் ?
ஆதவனைக் கேள் !
ம்ம் ..குளிர்ச்சி தருவதேன் ?
சூரியன் உஷ்ணம்
நான் A / C
நைஸ் ஆன்ஸர் !
காதலை ஆதரிப்பது ஏன் ?
காதலர்கள் அந்திப் பொழுதில் வருவதால் !
புரிய வில்லை !
அந்தியில் ஆதவன் மறைந்த பின் என்னை
சந்திக்க வருவதால் !
சூரியனை விட்டு சந்திரனைச் சந்திக்க வருவதால் ...
புரிந்தது !
கவிஞனை ஆதரிப்பது ...?
காதலர்கள் இளமை கடந்ததும் என்னை மறந்து விடுவார்கள் .
கவிஞர்கள் இதயம் என்றும் இளமையானது . என்னை மறக்கமாட்டார்கள் .
அந்தக் கவின் மனதில் நினைவின் நிலாவாக நான் என்றும் உலா வருவேன்
என்று கண் சிமிட்டினாள் நிலாத் தோழி !
ஆஹா ஆனந்தம் THANK Q டியர் டயானா !