திருமண வாழ்த்து

18 - 5 -2018 அன்று
ஊர் போற்ற நடக்கட்டும்
திருமணம்
அதில்
பார் போற்ற இணையட்டும்
இருமனம்

மணமாலை மாற்றும்போதே
உங்கள் மனமாலையையும்
மாற்றிக்கொள்ளுங்கள்

மணமகனே
அவள் உன் மனையல்ல
இணை என நினை

மணமகள்
அவன் உன் கணவனல்ல
உன் கண் அவன்
துணை என நினை

மணமகளே
நீ கழுத்தில் ஏந்து
ஆலய மஞ்சள் கயிறை
மணமகனே
நீ அறுவடை செய்
ஆயிரம் காலத்துப் பயிரை

ஸ்ரீதரே
நீ மயிலாடுதுறையில்
பிறந்த ஆண் மயில்
நிவேதாவைக் கண்போல்
காத்திடு உன் ஆண்மையில்

நிவேதா
நீ புதுவையில்
பிறந்த புது வைரம்
ஸ்ரீதரைக் கணவனாய் ஏற்பது
நீ பெற்ற வரம்

ஸ்ரீதரனே
நீ கைப்பிடித்திருப்பது
கலைமகள் நகரின் கலைமகளை
சந்திரசேகரின் தலைமகளை

மண நாளோ
வைகாசி வெள்ளி
வாழ்வில்
மகிழ்ச்சி பொங்கட்டும்
வைகையாய்த் துள்ளி

நிலவும் வானும்போல்
பூவும் தேனும்போல்
இணைபிரியாமல்
வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்

எழுதியவர் : குமார் (7-May-18, 9:14 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : thirumana vaazthu
பார்வை : 118

சிறந்த கவிதைகள்

மேலே