ஜாதி

ஜாதிகள் இல்லையடி பாப்பா
இதை பாரதி நம் அப்பாவிற்குச்
சொல்லியிருக்கவேண்டும்
ஏனென்றால்
பாப்பா ஜாதி பார்ப்பதில்லை
அப்பாக்கள்தான் பார்க்கின்றனர்

அணைக்க முடியாத
ஒரு தீ ஜாதி
அது மனித குலத்தை
சுட்டெரிக்கும் குறு தீ
அனைவருக்கும்
சிவப்புதான் குருதி
இதுவே நான் சொல்ல
விழையும் குறுஞ் செய்தி

கன்னிகாதானம்
ஏற்கும்போது பார்க்கும் ஜாதியை
யாரும் கண்தானம்
ஏற்கும்போது பார்ப்பதில்லை

தன் ரத்தத்தை
மனம் முடிக்க ஜாதிபார்ப்பவன்
பிறர் ரத்தத்தை தானமாய்
ஏற்க பார்ப்பதில்லை

ஆசை கொண்ட பித்தனை
புத்தனாக்கும் போதி
புத்தனையும் பித்தனாக்கும் ஜாதி

ஜோதி அருள் கொடுக்கும்
ஜாதி இருள் கொடுக்கும்

நாடு முழுதும் போதிமர
விதைகளை விதைத்தாலும்
ஜாதி அழியப்போவதில்லை
மதம் ஒழையப்போவதில்லை

யானைக்குப் பிடித்தாலும்
மனிதன் யாருக்குப் பிடித்தாலும்
மதம் என்றால் பிறகு
வதம் ஆக நேரிடும்

ரத்தத்தில் மதம்
இருந்தால் அவன்
ரதத்தில் இருந்தாலும்
கீழே விழ நேரும்

பிரம்மன் தோளில்
பிறந்தாலும்
காலில் பிறந்தாலும்
இறந்தால் இருவருக்கும்
பாலில்தான் அடக்கம்

ஜாதிச் சான்றிதழை
தீயிட்டு எரிப்போம்
இடஒதுக்கீடு வேண்டாம் என்று
அரசியல்வாதிகளை மறிப்போம்

மனிதா
பயிருக்குள்ள எண்ணெய் இருப்பதைப்போல்
தயிருக்குள்ள வெண்ணை இருப்பதைப்போல்
உன் உயிருக்குள் இருக்கும்
ஜாதியை கடைந்தெடுத்து
வீதியில் வீசு
பிறகு ஜாதி இல்லை என்று
பெருமையோடு பேசு

எழுதியவர் : குமார் (7-May-18, 9:45 am)
Tanglish : jathi
பார்வை : 936

மேலே