காணாத காதலி
விண்வெளி தொலைத்திட்ட
விண்மீன் விதையினில்
பெண்ணென மண்ணில்
முளைத்தவளோ !!!
பெண்ணென வளர்ந்திட்ட
விண்மீன் மகள் அவள்
மார்பிலே மதுரசம்
கொண்டவளோ !!!
அடைமழை பொழிந்திட
அதில் இவள் நனைந்திட
காமனின் கண்களை
துளைத்தவளோ !!!
புலன்களை தந்தவள்
புஜங்களை மறைக்கிறாள்
கர்வத்தில் வடித்திட்ட
சிலை இவளோ !!!
ஒரு இதழ் அவள் தர
மறு இதழ் மலர் தர
மகரந்த சேர்க்கைகள்
நடந்திடுமோ !!!
புல்வெளி திரட்டிய
பனித்துளி குமிழ் ஒன்று
இமைவழி என்னை
விழுங்கிடுமோ !!!
நிலவினில் தெரிகின்ற
மேகத்தின் புள்ளிகள்
உன் இடையினில்
மையமிட்டு மச்சம் ஆனதோ !!!
என் இதழ்களில்
வழிகின்ற தேன் துளி
கோளம் உன் கண்ணத்தில்
கோலம் ஒன்றய் தீட்டிவிட்டதோ !!!
என் மடியினில் தவழ்ந்திடும்
வீணையின் ராகங்கள்
உன் விரல்கள் மீட்டிட
சொர்க்கம் காணுதோ !!!
என் சுவாசத்தில்
இல்லையடி உயிர்வளி
நீ பிரிகையிலே
நெஞ்சில் உயிர்வலி !!!
உமாசங்கர். ரா