தொழிலாளர் தினம் யாருக்கு
சூரியனின் உக்கிரத்தில்
வியர்வை வழிய
தசை நசுங்கி
இரத்தம் சிந்த
உழைப்பவருக்கு மட்டுமா
.
இல்லை
.
குளிரூட்டப்பட்ட அறையில்
வியர்வைத் துளை தொலைத்து
தசை விறைத்து
இரத்தம் உறைய
வேலை செய்பவர்களுக்கும்
.
தொழிலாளர் தினம் சொந்தமே
.
கோபப்பட்டாலும்
கையூட்டுப் பெறாது
கண்ணியத்தோடு
கடமையாற்றும்
அனைவரும் கொண்டாடும் தினம்