ஓய்வதற்கேன் ஓட்டம்

அண்டார்டிகா செல்லும் அளவிற்கு அறிவிருந்து என்ன பயன்..??
அண்டை வீட்டாரை அணுசரிக்க நாம் இன்னும் கற்கவில்லை..!!

ஆயிரம்பேரை முகநூல் நண்பனாக்கி என்ன பயன்..??
அடுத்தவீட்டாருடன்
ஆரத்தழுவி ஆர்ப்பரித்ததாய் வரலாறு இல்லை..!!

பாரிலுள்ள அறிஞருடன் பேசி பல மொழிகளில் வல்லுநர் பட்டம் பெற்று என்ன பயன்..??
பலகாலம் கடந்து காண்பவரிடம்
ஒரு நமட்டு(courtesy) சிரிப்பு-சில வார்த்தைக்குமேல் என்ன பேசுவது என முழிக்கும் கண்கள்..!!

தூரத்திலுள்ளதை உயிரென மதிக்கும் மதிகெட்ட மனம்..!!
அருகில் இருப்பவரின் அருமை அறிவதில்லை..!!!

பணம் பணம் என பறக்கிறாய்..!!
பணம் வேண்டும் தான்..!
குணத்தை புதைத்து
மனதை சிதைத்து
சினத்தை இழைத்த(stitched)
பணம் வேண்டாம் என்பேன்..!!
பக்கத்தில் இருந்தவன்
பிணமானதும் தான் பண்பிலுயர்ந்த பண்டிதன் பக்கத்தில் இருந்தானென உணர்கிறாய்..??

சவமானபின் சிவமென
தவமிருக்க முடியுமா..??
காற்றுள்ள போதே
தூ(போ)ற்றிக்கொள்..!!

ஓடுவதும் ஆடுவதும் ஒருநாள் ஓய்வதற்கு தான் என்றறிந்தபின்
நாடுவதும் தேடுவதும் நாராயணனையே..!!

வேலை பளு தான்..!!
நிற்காமல் நகரும் நாழிகை தான்..!!
சற்று நின்று ரசித்துவிட்டு செல்லுங்களேன்..!!

என் காட்சியில் ரசனை எனப்படுவது உன் விழிக்கு மாறாக-வேறாக-தவறாக-திமிறாக-மிகுந்த
கோமாளிதனமாக-
பொறுப்பற்றதாக-
உணர்ச்சி
அற்றதாக-உற்றதாக-
நேரத்தை
வீண்டிப்பதாக
தெரியலாம்..!!
நீ என் கண்வழிதான் பார்க்க வேண்டும் என்ற கட்டாயமில்லை..!!
நான் பார்க்கும்பொழுது தடுத்து-தகிக்கும் வார்த்தைளை உதிர்க்காமல் இருந்தாலே போதுமென்பேன்..!

உங்கள் குணங்களில் ரசனையை புகுத்த சொல்லவில்லை..!!!
புதைக்காமல் இருங்கள் என்கிறேன்..!!
புரியாத புதிரோ..?
காலம் கடந்த புரிதலில் பயனில்லை..!!

எழுதியவர் : பகவதி லட்சுமி (12-May-18, 11:49 pm)
சேர்த்தது : பகவதி லட்சுமி
பார்வை : 373

மேலே