மன மலர் சமர்ப்பணம்


காளான்கள் அழகாக
பூத்து நின்றாலும்
யாரும் எடுத்துச்
சூடிக் கொள்வதில்லை

தாமரை சேற்றில்
மலர்ந்தாலும்
இறைவன் திருவடியில்
ஆராதனை ஆகிறது

மலர்கள் மண்ணில்
உதிர்ந்து மடிந்தாலும் யாரும்
சவம் என்று ஒதுக்குவதில்லை

மாறாக
கல்லறையில் ஆத்மாவுடனும்
துயிலும்
கடவுள் காலடியிலும்
தவழும்
கம்யூனிசம் சொல்லாத
சமத்துவம்

குறிஞ்சி மலர் பூப்பதே
ஒரு தவம்

மனதில் சேரும் உண்டு
காளானும் உண்டு
தாமரையும் குறிஞ்சியும் உண்டு

மன மலரின்
ஆத்ம சமர்ப்பணம்
மனிதனின் மாதவம்
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Aug-11, 4:08 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 357

மேலே