அம்மா
அன்னை
அன்பிற்கு அகராதி அவள்
ஆகாரத்திற்கு ஆதியவள்
இன்முகத்தின் எடுத்துகாட்டுமவள்
ஈகையயை எனக்கூட்டியவள்
உண்மையின் உருவமவள்
ஊக்கத்தின் உறுப்பும் அவள்
எளிமையின் வலிமையவள்
ஏழ்மையை போக்கியவள்
ஐயத்தை விரட்டியவள்
ஒற்றுமை உருவாக்கியவள்
ஓதலின் முதற் புள்ளியவள்
ஒளடததின் ஆணிவேரும் அவள்
என் உயிரும் அவள்
என் மெய்யும் அவள்