நீ இல்லாமல் நானில்லை

இருட்டிலே இனிதே
உன் கதகதப்பில் வாழ்ந்த
அந்த நாட்கள்

என் ஒவ்வொரு
அழுகைக்கும்
வெவ்வேறு அர்த்தம்
புரிந்து எனை ஆதரித்த
அந்த சூழல்கள்

உன் மார்போடு
எனை அள்ளி
அனைத்து தழுவிக்கொண்ட
அந்த நிமிடங்கள்

என் மீது நீ முத்தமழை
பொழிந்த அந்த
தருணங்கள்

ஒரே ஒரு நிமிடம்
எனை காணாமல்
நீ தவித்த அந்த
நொடிகள்

காய்ச்சல் வந்து
நான் படுத்தால்
தீயிலிட்ட மெழுகுப்போல்
நீ உருகியது

எனக்கொரு தீங்கென்றால்
வேண்டுதலையே
வேலையாய் கோயில்களை
சுற்றியது

மழைக்கும்
வெயிலுக்கும்
உன் முந்தானை
குடையில்
பாதுகாப்பாக வீடு
சேர்த்த அந்த மணித்துளிகள்

நீ உறங்கியப்போதும்
உனையறியாமல்
உன் கைகள் எனக்கு
உன் சேலைத்தலைப்பில்
சாமரம் வீசிய அந்த இரவுகள்

புதுச்சேலை நீ வாங்காமல்
எனக்கு பண்டிகை தவறாமல்
புத்தாடை அணிவித்து
அழகுப்பார்த்த அந்த காலங்கள்

அம்மா மறக்கமுடியுமா...
நீயில்லாமல் நானேது
உன் நிழலில்லாமல்
என் உயிரேது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (14-May-18, 8:45 am)
பார்வை : 2229

மேலே