வேர்

வேர்
=====
வேரோடு பேசிக்கொண்டிருந்தால்
கிளைகளுக்கு பொறாமை வந்துவிடுகிறது.

தன்னைக் கவனிக்கவேண்டும்
என்பதற்காக காற்றின் கைகோர்த்து
இலைகளை ஆட்டியும்
பூக்களைப் புஷ்பித்தும்
நறுமணத்தை வீசியும்
வசீகரம் செய்கிறது.

காற்று கைவிட்டதும்
இலைகள் உதிர்ந்தும்
பூக்கள் சருகாகியும்
நறுமணம் துர்மணமாகியும்
நிலைமாற்றம் கொள்ளுகையில்
யாரும் கவனித்து விடக்கூட்டதென்று
அமைதியாகும் கிளைகளுக்கு
யாரும் கவனிக்காதவாறு எப்போதும்போலவே
நிலம்துளைத்து நீருறிஞ்சி கிளைகளின்
பசிபோக்கிவிடுகிறது ஒரு
பாசமுள்ள தகப்பனைப்போல..
****
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-May-18, 1:56 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 107

மேலே