என் தாய்

தொப்புள் கொடியில் கட்டி
என்னை பத்து மாதம்
தாலாட்டினாய் உந்தன்
கருவரைத் தொட்டிலிலே, தாயே
சத்துள்ள உணவாய் உண்டு
அதன் சாரெல்லாம் உன்
ரத்தத்தின் மூலம் எனக்கு
உணவாய் அளித்தாய்
பாங்குடன் வளர்த்து
கருவறையில் நான்
வாசம் இருக்கையிலேயே
நல்லவைக்கேட்டு ,நல்லவைப்படித்து
சிசு என் மனதில் பதியவைத்தாய் , தாயே,
கருவறையிலிருந்து வெளி கொணர்ந்து
தொட்டிலில் கிடத்தி தாலாட்டுப் பாடி
முலைப்பால் தந்து பொறுப்புடன்
வளர்த்தாய், கண்ணிமையும் மூடாது
என் வளர்ச்சியிலேதான் உந்தன்
கண் விழிப்பெல்லாம் என்று வளர்த்தாய்
ஆளாக்கி மனிதனாய் , நல்லதோர் மனிதனாய்
உலகில் உலவவிட்டாய் . தாயே
இன்றும், தாயே என் மனம் தளர்ந்தால்
உன் அரவணைப்பில் மனத்தில் உறுதி
வந்து பாயம் தாயே , உன் மடியில்
தலைவைத்து படுத்தால் போதும் தாயே
சொர்கமாது என்று எண்ணவைக்கும்
என்றும் எனக்கு நீ தான் கண்கண்ட தெய்வம்
அதனால்தான் சொன்னார்கள்,' அன்னையும்
பிதாவும் முன்னறி தெய்வமென்று'.
உன்னை வாழ்த்தி உன் நினைவிலேயே
வாழ்ந்து மகிழ்ந்திட வேண்டும் உன்
மகன் நான் தாயே .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-May-18, 5:49 am)
Tanglish : en thaay
பார்வை : 59

மேலே