ஆழ்மனதின் ஆற்றல் பாகம் 2

ஆழ்மனதின் ஆற்றல் பாகம் 2


சந்திரகாந்த் தனக்குள்ளே ஒரு சக்தி இருப்பதை அறிந்தான். தான் மனதில் நினைப்பவை கண் முன் உண்மையாவதை கண்டு,பயமும் அதிர்ச்சியும் அதிசயமும் கலந்த ஒரு உணர்ச்சியுடன் நடக்கலானான்.
கூடி நடக்கும் மனிதர்களுக்கு இது தெரிய வாய்ப்பு இல்லாததால்,அவர்கள் சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் என்றும் போல் நடந்தனர்.
கன்னியாவும்,சங்கமித்ராவும் முன்னே செல்ல ஒரு இடைவெளிவிட்டு அவன் நடந்தான்.கன்னியா இவனை அடிக்கடி பார்ப்பதை அறிந்து,அவளிடம் கண்ணால் தன் நலத்தைத் தெவித்தவாரே நடையை தொடர்தான்.
மலைப்பாதை மேலே செல்லச்செல்ல செங்குத்தாகியது. நடந்த களைப்பு கால்களில் வெளிப்பட,உள்ளமும் உடலும் ஓய்வுவேண்ட,குளிர்ந்த காற்று உடலை தாலாட்டி கண்களை மூட செய்ய சிறு குழந்தைகள் துள்ளி ஓடி செல்வதை காட்டி அவைகளின் வேண்டுதலை புறக்கணித்து நடக்கலானான்.
மலை பாதையை அமைக்கப் பட்டிருந்த விதம் முன் சென்றவர்கள் மலைக்குப் பின் மறையும் அளவுக்கு வளைவாக அமைக்க பட்டிருந்தது.சிறியதாகவும்,குறுகலாகவும் மாறிய பாதையில் கைப்பிடிகள் அமைக்க பட்டிருந்தது செல்வோருக்கு அது ஒரு தைரியத்தையும் பாதுகாப்பையும் கொடுத்தது. இன்னும் ஒரு மணிநேரத்தில் மலை உச்சியை அடையலாம் என்று யாரோ சொல்லியது செவிக்கு அமுதமாக ஒலித்திட தன்னை ஆசுவாச படுத்திக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
கன்னியாவும்,சங்கமித்ராவும் வளைவில் திரும்பி மறைந்திட ,தன்னை மீண்டும் ஒரு முறை என்ன நடந்தது என நினைத்துக்கொண்டே உடன் சென்றவர்கள் மறையும் காட்சியையும் ரசித்துக்கொண்டு நடக்கையில், அந்த அதிசியம் மீண்டும் நிகழ்ந்தது. தான் மரங்களின் நடுவே தனிமையில் நிற்பதை உணர்ந்தான். மீண்டும் பாழடைந்த மண்டபம் ,சிதிலமடைந்த கோவில் அடர்த்த மரங்கள் கண்களில் விழும் மழைத்தண்ணீர் மனதில் பயத்தையும் உடம்பில் நடுக்கமும் கூடி அவனை ஆட்டுவித்தது.மனம் ஒரு நிலையில்லாமல் தவித்திட ,தன் நிலை தான் அறியாதவாறு உள்ள ஒரு கிறக்கத்தில் அவன் திசை தெரியாமல் நடக்கலானான்.
எதிரில் தெரிந்த மண்டபத்தின் தூண்களை பிடித்து ஏறிய பொது யாரோ அழைப்பதுபோல் ஒரு பிரமை.அழைத்த குரல் வந்த திசையை நோக்கி மெல்ல நடக்க முற்படுகையில்,காலில் எதோ தடுப்பதை அறிந்தான்.மெல்ல பார்வையைக் கீழே செலுத்த, திடுக்கிட்டான் ஒரு மனித உடம்பு, அதன் கைகளில் தன் கால்கள் சிக்கி இருப்பதைக் கண்டு மெல்ல அதனை விடுவிக்க குனிந்த பொழுது,தன் பின்னால் ஒரு உருவம் வந்து அதை தொடாதே எனக் கூறிட, அக்குரலில் இருந்த கடுமையும்,கண்டிப்பு தன்மையும் அறிந்து, தன் முகத்தைத் திருப்பி அந்த குரலுக்கு உரியவனை நோக்க,மீண்டும் ஒரு அதிர்ச்சி தூணிலிருந்து குரல் வந்ததோ என நினைக்கும் வண்ணம் அங்கு யாரையும் காணவில்லை. தன்னைக்குள்ளே உள்ள தைரியத்தை ஒன்றாக திரட்டி யார் என்னிடம் இப்போது பேசியது என கேட்டான் ? அவன் குரல் அவனுக்கே புரியாதவாறு ஒலித்தது, சிறுநடையில் அந்த தூணை நோக்கி நகர்ந்தான்.இது யாவையும் பிரமைதான் என மனதில் சொல்லிக்கொண்டே அந்தத் தூணை நெருங்குகையில் ஏன் இது நடக்கிறது,தான் எவ்வாறு மீண்டும் இந்த மண்டபம் வந்து அவதிப்படுகிறேன் என தன்னைத் தானே நொந்து கொண்டு, மனதை ஒரு நிலைக்குக் கொண்டுவர பிரயத்தனித்தான். உள்ளம் முழுதும் துயரத்துடனும் கண்கள் குளமாகும் வேளை,மீண்டும் அந்த குரல் என்னை காப்பாற்றுவாயா என ஒலிக்க,அந்த குரல் தூணிலிருந்து சிறிது தூரத்தில் வருவதை அனுமானித்து மெல்ல அங்கு செல்ல,அங்கே காலில் ஒரு பெரிய கல் விழுந்து முகமெல்லாம் மூடிமறைக்க ஒரு பெண் உருவம் தென்பட,நீ யார் என கேட்க அவள் பாதை தவறி அங்கு வந்ததாகவும் மழையில் இந்த மண்டபத்தில் தன் கணவருடன் ஏறி அமர்ந்திருக்க மின்னலும் இடியும் கூடி பெருமழையில் தூண் விழுந்து தன் கணவர் அதனடியில் அகப்பட ,தான் அவருக்கு உதவி செய்ய சென்றபோது மீண்டும் ஒரு மின்னல் இடி வந்து தாக்கி ஒரு சுவர் விழுந்திட அதில் தன் கால் மாட்டி க் கொண்டதால் நகரமுடியாமல் இருந்த பொழுது சில கற்கள் தன் மீது சரிந்து தன்னை காயப்படுத்தியதையும் தெரிவித்தாள்.
தன்னை விடுவிக்க வேண்டினாள். சந்திரகாந்த் மெல்ல அவளை விடுவிக்க தன் கைகளை கொண்டு அவளை பற்றி எழுந்திருக்க முயற்சி செய் என கூறினான்.அவள் கைகள் உறுதியாகவும் தன்னை அவள் இழுப்பதையும் அவன் அறிய சிறிது தாமதமானது.
தன் முன் நிகழ்வது யாவையும் மனப் பிரமை என்பதை அறிந்து, தன்னை அவளிடமிருந்து விடுவிக்க முற்பட்டான். மனதை கட்டு படுத்தி ஒரு நிலைக்கு கொண்டுவந்து கண் மூடி கன்னிகாவையும் ,சங்கமித்ராவையும் நினைத்தான்.சிறிது நேரம் சென்றது கண் திறக்கையில் தான் அந்த மண்டபத்திலேயே இருப்பதாய் தெரிந்தது. மனதை மீதும் கட்டு படுத்தி அவர்களை மறுமுறையும் நினைத்தான், கைப்பேசி சிணுங்குவதை உணர்ந்து,அதை எடுத்து பேச மறுமுனையில் கன்னிகா "எங்கே நீங்கள்?" என் பின்னால் வந்தீர்கள் காணவில்லையே என வினவ, இதோ வருகிறேன் என கூறினான்.
கைப்பேசியை பாக்கெட்டில் வைத்து விட்டு சுற்றும் பார்த்தபொழுது தன் முன்னெய் செல்லபவர்களையும் பின்னே உள்ளவர்களையும் கண்டான்.அவர்கள் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் நடப்பதை கண்டு தானும் அவர்களுடன் கலந்து நடக்கலானான். எப்படி தான் மீண்டும் இங்கு வந்தோம்,மண்டபமும் கோவிலும் எங்கே ?பெண்ணை கண்டோமே அவள் எங்கே ? இவையாவும் நிகழ்ந்ததா ! இல்லையா ? என்ற கேள்விகளுடன் கைப்பிடியைத் தொட்டுக்கொண்டு நடக்கலானான். கன்னிகாவும்,சங்கமித்ராவும் அவன் மலை உச்சிக்கு வருவதை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தனர்.
பின் வரும் குழந்தைகளுடன் நடந்து வந்த ஒரு நடுத்தர வயதுள்ள ஒருவர் குழந்தைகளிடம் கூறிய நிகழ்வு சந்திரகாந்தனை கவர்ந்து இழுத்தது. அவர் கூறியது ஆழ்மனதின் ஆதிக்கத்தைப் பற்றியதாகும். ஆழ்மனதில் ஒருவர் எவ்வாறு எண்ணங்களை வளர்க்கிறார்கள்,அவைகளுக்கு உருவம் கொடுத்து அவை எங்ஙனம் தங்களை ஆட்கொண்டு நிஜமாகி, தங்களுடன் பேசி, பணியவைத்து எண்ணஓட்டங்கள் ஆதிக்கம் செலுத்தி காரியங்களை கட்டளையிட்டு அடிபணிய வைத்து நடத்தும் என்றும். அமெரிக்காவில் தான் சென்ற பொழுது "ஏட்டி" என்ற" பிக் புட்" குழந்தைகளின் ஆழ்மனதில் ஆதிக்கம் செலுத்தி மனதில் தோன்றும் எண்ணங்கள் தங்களை ஆட்கொண்டு குழந்தைகள் ஒன்றை ஒன்று தாக்கி கொலை செய்ய தூண்டி கொலை செய்ததைப் பற்றி கூறினார். சந்திரகாந்த் இதை கேட்க கேட்க தனக்கு நிகழ்ந்ததை நினைத்துப் பார்த்தான். தனக்கு இவ்வாறு நடந்திருக்கலாமோ என நினைத்தபடி தன்னை சமாதான படுத்திகொண்டு விரைவாக நடக்க ஆரம்பித்தான்.
தன் தலைக்கு மேல் மீண்டும் பறவைகள் ஒலி எழுப்ப, இவைகள் ஏன் சப்தமிடுகின்றன,இவைகள் யாவும் பூக்களாகட்டும் என மனதில் நினைத்தான். பூக்களாகி விழும் என எதிர்பார்த்து அவைகளை நோக்க அவைகள் மேலும் உரக்க ஓசை எழுப்பிக்கொண்டு தன்னை கடந்து சென்றதை கண்டு பெரிதாக சிரித்தான்.
கூடே சென்றவர்கள் தங்களை கண்டுதான் சிரிக்கிறான் என்று எண்ணி பதிலுக்கு சிரித்துக்கொண்டே சென்றனர். அவர்கள் யாருக்கும் அவன் சிரித்தது எதற்காக என்பது தெரிய வாய்பில்லையே!!!
சந்திரகாந்த் மற்ற காட்சிகளை ரசித்துக்கொண்டு மலை உச்சியை அடைந்தான். கன்னிகாவும் சங்கமித்ராவும் அவனை கண்டவுடன் ஓடிவந்து அணைத்துக்கொண்டனர்..

எழுதியவர் : கே என் ராம் (14-May-18, 3:29 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 55

மேலே