உறுப்புத் தானம்

உறுப்புத் தானம்

இறைவனால் படைத்த மனித உடலில் ஒவ்வொரு உறுப்பும் விலை மதிக்க முடியாதது. கனடா ஒன்றரியோ மாகாணத்தில் மிசிசாகா நகரில் வாழும் ஜோன் தம்பதிகளுக்கு ஒரே மகன் பீட்டர் . ஜோன் ப்ளூ ஜெய்ஸ் (Blue Jays) பேஸ் பந்து விளையாட்டு அணியில் () விளயாடும் விரர் ஜோன் தம்பதிகளுக்கு ஒரே மகன் பீட்டர் . பீட்டர் படிப்பில் மட்டுமல்ல வியாட்டிலும் கேட்டிக்காரன். பதினாறு வயதில் தந்தைஇது போல் ஒரு விளையாட்டு வீரன் . கல்லூரி ஐஸ் ஹாக்கி அணிக்கு அவன் தான் கேப்டன். பீட்டருக்கு வாட்டர்லூ பல்கலை கழகத்தில்படித்து கணனி மென் பொருள் பொறியிலாளராக வரவேண்டும் என்ற கனவு அவனுக்கு .

ஒரு நாள் பீட்டர் தான் சிறு சிறுநீர் கழிக்கும் போது இரத்தம் கலந்து குறைந்த அளவு போவதையும், அதோடு இரு பாதங்களில் வீக்கம் இருப்பதைக் கண்டு பயந்து. . . தாய் சில்வியாவிடம் முறையிட்டான். ஜோனும் சில்வியாவும் உடனே மகனை குடும்ப வைத்தியரிடம் உடனே கூட்டி கொண்டு போய் காட்டி மகனுக்கு உள்ள உடல் நல பிரச்சனையை எடுத்து சொன்னார்கள்.. அவர்களின் குடும்ப வைத்தியர் டாக்டர் மல்கம்( Dr Malacom) வெகு காலம் அவர்களுக்குத் தெரிந்த வைத்தியர். உடனே பல பரிசோதனைகளை செய்து ஒரு முடிவுக்கு வந்தார் ஜோன் தம்பதிகளிடம் பல கேள்விகள் கேட்டார்.
“ஜான் நான் கேட்கப் போகும் கேள்விகளுக்கு மறைக்காமல் உண்ம்மயை சொல்லும்”
“ என்ன கேள்விகள் டாக்டர்”?
“ உமது பெற்றோருக்கோ, அல்லது சில்வியாவின் பெற்றோருக்கோ நீரக வியாதி இடுந்ததா “?
“ இருந்தது டாக்டர். என் தந்தைக்கு நீரக வியாதி எழுபது வயதில் இருப்பதைக்கண்டு பிடித்து அவர் இருபது வருடம் டியாலிசிஸ் செய்து 90 வயதில் இறந்தவர். ஏன் கேட்குறீர்கள். டாக்டர்”?
“ உமது பாட்டனாருக்கு சிறு நீரக வியாதி இருந்ததா”? .“ இருந்தது டாக்டர். அப்போது கிட்னி டியாலிசிஸ் செய்யும் முறை இருகவில்லை அதனால் அவர் எழுபது வயதில் காலமானர் என்று என் தந்தைஎ எனக்கு சொன்னார் “
“நீர் சொல்வது சரி. டாக்டர் . வில்லியம் கோல்ப் (Dr. Willem Kolff) என்பவர் கிட்னி டயாலிசிஸ் மெசினின் தந்தை என சொல்ல படுகிறது நேதர்லாந்தை சேர்ந்த அவர் 1943 யில் அந்த . மெசினை உலகுக்கு அறிமுக படுத்தினார். அது கனடாவுக்கு ஐம்பதில் தான் வந்தது :உம் மகன் பீட்டருக்கு சிறு நீரக வியாதி ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறது என சந்தேகப் படுகிறேன் எதற்கும் உங்கள் மகனை எனக்கு தெரிந்த சிறுநீரகச் ஸ்பெலிஸ்ட் டாக்டர் வில்லியம்சை போய் பாருங்கள். அவர் பல வருடங்கள் அனுபவம் உள்ள ஒரு திறமையான டாக்டர். அவர் உங்கள் மகனை பரிசோதித்து ஆவன செய்வார். அவருக்கு உங்கள் மகன் பற்றி அவருக்கு கடிதம் அனுப்புகிறேன். தாமதியாமல் அவரைப் போய் பாருங்கள் “ என்றார் டாக்டர் மல்கம்

***

டாக்டர் வில்லியம்ஸ் பீட்டரை பல பரிசோதனைகள் செய்த பின் பின் ஜான் தம்பதிகளுக்கு சொன்னார்/
“ அது சரி இப்பொது உமது நமகனுக்கு என்ன வயது “? டாக்டர் கேட்டார் .“ 20 வயது. அடுத்த வருடம் வாட்டர்லூ பல்கலை கழகத்தில் படிக்க போக இருக்கிறான்”.

“ஜோன் . உமது மகனுக்கு மரபணு காரணத்தல் கிட்னி வியாதி வந்து விட்டது . தாமதிக்காமல் கிழமைக்கு மூன்று நாட்கள் .ஒவ்வொரு தடவையும் மூன்றரை மணித்தியலங்கள் டயாலிசிஸ் செய்ய வேண்டும்” டாக்டர் வில்லியம்ஸ் சொன்னார்.
“அட கடவுளே இந்த வியாதி என் மகனுக்கு இந்த சிறு வயதில் வரவேண்டுமா? கவலை பட்டாள் சில்வியா . அவள் கண்களில் கண்ணீர் வந்ததை டாக்டர் வில்லியம் கண்டார் .
“ கவலை வேண்டாம் சில்வியா . நீங்கள் இருப்பது கனடா ஒன்றாறியோவில். இந்த மாதிரி திறமையான வைத்திய சேவை இங்கு இலவசம். வீட்டில் வைத்து செய்ய ஒரு நர்ஸ் வருவாள். பணச் செலவு இல்லை. வெகு விரைவில் உங்கள் மகனுக்கு கிட்னி தானமாக கிடைக்க ஒழுங்கு செய்கிறேன். அதிர்ஷ்டம் இருந்தால் ஒரு வருடத்துக்குள் பல்கலை கழகத்துக்கு படிக்கப் போக முன் பீட்டரின் இரு கிட்னிகளை மாற்றி விடலாம். அதன் பின் டியாலிசிஸ் செய்யத் தேவை இல்லை. எங்கும் பயணிக்கலாம் உங்கள் இருவரில் ஒருவர் கிட்னி உங்கள் மகனுக்கு தானம் செய்யவும் முடியும். ஆனால் பரிசோதனை செய்து உங்கள் கிட்னி பொறுந்துமா இல்லையா என்று பார்க்க வேண்டும். அனால் மரபணுவின் படி உங்க பெற்றோருக்கு கிட்னி வியாதி இருந்ததாக டாக்டர் மல்கமின் ரிப்போர்டட சொல்கிறது. அதனால் பொறுந்துவது கடினம்”
"அட கடவுளே. அப்ப எப்போ பீட்டர் டயாலிசிஸ் செய்ய ஆரம்பிக்க வேண்டும் டாக்டரிடம் ஜோன் கேட்டார்.
“ பீட்டருக்கு வசதி இருந்தால் முடிந்தால் அடுத்த கிழமை ஆரம்பிக்கலாம். தாமதம் செய்யாமல் செய்தால் நன்று. சில காலம் பீட்டர் இந்த ஆஸ்பத்திரிக்கு வரவேண்டும் அதன் மூன்று மாதத்தில் வீட்டில் வைத்து செய்ய நான் தேவையான ஒழுங்குகளை செய்கிறேன். இனி இவர் ஹாக்கி விளையாடுவதை நிறுத்தினால் நல்லது “ டாக்டர் வில்லிமஸ் சொன்னார்.
“ : டாக்டர் கிட்னி தானம் பற்றி விபரம் சொல்லமுடியுமா”? ஜான் கேட்டார்
“ நிட்சயமாக நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
இரத்த சம்பந்தமுள்ள உறவுகள் அல்லது இரத்த சம்பந்தமில்லாத நண்பர்கள் முதலியோர் அன்பினால் உந்தப்பட்டு அளிக்கும் தானம் கிடனி தானம், .
பணத்திற்காக தானம் செய்வோருமுண்டு வறுமைப்பிடியிலுள்ளோர் பணத்திற்காக தம் ஒரு கிட்னியை விற்பவர்க்ளும் உண்டு. மனிதநேயமுடையோர் சில சமயம் தானம் செய்ய முன் வரலாம்..
இது ஒருவருக்கு தெரிந்தோ தெரியாமலோ வற்புருத்தியோ மிரட்டியோ பெறப்படும் தானமில்லை. உறுப்பு திருட்டு மூலம் கிட்னி மாற்றப்ப்டுவதுண்டு . இது சட்ட விரோதமானது. பல நாடுகளில் உறுப்புகளுக்காக மனிதர்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றனர், சில சமயங்களில் கொல்லப்படுகின்றனர்.சில மருத்துவமனைகளில் உயிருடன் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் சம்மதம் இன்றி அவர்களுக்கு தெரியாமலேயே உறுப்புகள் கொள்ளையடிக்கப்படுகின்றன.சில சமயங்களில் இறந்தவரின் உடம்பிலிருந்து கூட உறுப்புகள் திருடப்படுகிறது. முதலில் தானம் செய்வோரிடமிருந்து பெறப்படும் உறுப்புக்களை பெறுபவரின் உறுப்புகள் ஏற்றுக்கொள்ளுமா என்பதை உறுதி செய்ய வேண்டும். சில சமயங்களில் பெறுபவரின் உடம்பின் எதிர்ப்பு சக்தி மாற்று உறுப்பினை ஏற்றுக்கொள்ளாது.அப்படி ஏற்காத பட்சத்தில் அறுவை சிகிச்சை தோழ்வியில் முடிவடையும்.
டாக்டர் வில்லியம்ஸ் சொன்னபடி பீட்டருக்கு அடுத்த கிழமை டயாலியசிஸ் வைத்தியம் பீட்டருக்கு ஆரம்பித்தார்.

****
வைத்தியம் ஆரம்பித்து இரண்டு மாதத்துக்குள் எதிர்பாராதவாறு அந்த சம்பவம் நடந்து 20 இளம் ஹாக்கி வீரர்களோடு ஒரு மட்சுக்கு பொய்க் கொண்டிருந்த வான், ஒரு பெரிய வாகனத்தோடு மோதி தடம் புரண்ட பொது 15 ஹாக்கி வீரர்களின் உயர்கள் பிரிந்தன அந்த இறந்த 15 ஹாக்கி வீரர்களில், 21 வயது ஹாக்கி வீரர் ஒருவரின் இறுதி ஆசை தன் ஆறு உறுப்புக்கள் தானம் மூலம் உறுப்பு அவசியம் தேவை பட்டவரகளுகு அவர்கள் வாழ பொய் சேர வேண்டும் என்பது அவர் விருப்பம் விபத்தை சந்திக்க பல வாரங்களுக்கு முன்பு, உறுப்பு நன்கொடை அட்டையில் அந்த வீரர் தான் தானம் செய்யும் உறுப்புகளை குறிப்பிட்டு கையெழுத்திட்டார். அவர் விருப்பம் தன் ஒரு உறுப்பு தன்னைப் போன்ற ஒரு ஹாக்கி வீரருக்குப் பொய் சேர வேண்டும் என்பதே கையெழுத்திட்ட அந்த இறந்த வீரரின் பெற்றோரோடு டாக்டர் வில்லியம்ஸ் தொடர்பு கொண்டு பீட்டர் பற்றி விபரம் சொன்னார். அவர்கள் டாக்டர் சொன்னதைக் கேட்டதும் மறுப்பின்றி மகனின் இரு கிட்னிகளை பீட்டருக்கு தானம் செய்ய சம்மதித்தனர். அடுத்து எல்லாமே விரைவாக நடந்து, இறந்த ஹாக்கி வீரரின் கிட்னி பீட்டருக்கு பொருத்தப் பட்டது. ஜான் தம்பதிகளும், பீட்டரும், இறந்த வீரரின் பெற்றோருக்கு நன்றி தெரிவுத்தனர் பீட்டர் இறந்த ஹொக்கி டீமின் ரசிகன் என்பத இறந்தவரின் பெற்றோரருக்கு டாக்டர் மல்கமும். வில்லிமஸ் சொன்னார்கள். விதி எப்படி பீட்டருக்கு உதவி இருக்கிறது என நினைத்து அவனின் பெற்றோர் , . நண்பர்கள், இனத்தவர்கள் ஆகியோர் ஆச்சரிப்யப்பட்டனர்.

****.

(உண்மையும் புனைவும் கலந்த கதை)

எழுதியவர் : பொன் குலேந்திரன் கனடா (14-May-18, 7:22 am)
பார்வை : 95

மேலே