மாடி வீட்டு ஏழை

ஒரு கால் முடங்கிய முதியவர் , வயிற்றுக்காக தன் ஊன்று கோல்
இரண்டு அக்குள் தாங்க குடிசை பகுதிக்குப் போய் நாலு தெரு சுற்றி கிடைத்த பழையதோ புதியதோ போட்ட உணவை வாங்கிக்கொண்டு தான் தங்குமிடம் திரும்ப அவரால் முடியாமல் கால்களில் ரத்தம் வடிய ரோட்டோரம் விழுந்து கிடந்தார்.

அந்த வழியாக அனேக வாகனங்களில் வருவதும் போவதுமாக இருந்தார்களே
ஒழிய இரக்க குணம் படைத்தவர் ஒருவர் கூட இல்லை அந்த முதியவரை கண்டும் காணாததுபோல் போனவரே அதிகம்

வானம் கருக்கப்போகும் நேரம் ஒரு வாகனம் அங்கே நின்றது ஓட்டுனர் கதவை திறந்து இறங்கி அந்த முதியவரிடம் போய் " என்ன பெரியவரே மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் விழுந்து கிடக்கிறீங்க நீங்க தங்குற இடம் எங்க இருக்கு சொன்னீங்கன்னா அங்கே கொண்டு போய் விட்டுவிட்டு போவேன்" என்றார்

தம்பி வயித்துக்காக நாலு வீடு போனா மீந்தத சோந்தத கொடுப்பாங்க வாங்கிக் கிட்டு தங்குகிற இடத்துக்கு போயிடுவேன் இன்னைக்கு என்னவோ தெரியல தலையை சுத்த எனக்கே தெரியாம விழுந்துவிட்டு இருக்கேன் நானே எப்படியாச்சும் போயிக்கிறேன் அதுக்காக எட்டு பத்து லட்ச ரூபாய் பொரும் காருல இந்த பிச்சக்காரனை உக்காரவச்சா அந்த விலை உயர்ந்த காருக்கு என்ன மரியாதை அது என்னை ஏளணமா பார்க்கிற மாதிரி தோணுப்பா" என்றார் முதியவர்

ஓட்டுனரின் கண் கலங்கியது, ஐயா பெரியவரே அதைப்பத்தி கவலையை விடுங்க ஒரு உயிருக்கு மிஞ்சினதுக்கப்புறம் தான் இதுவெல்லாம், தன் இரண்டு கரங்களால் வாரி தன் காரில் அமரவைத்து காரை ஓட்டினார் ஓட்டுனர் முதியவர் இறங்க வேண்டிய இடத்தில் நிறுத்தச் சொன்னார்

அது ஒரு பங்களாவாக இருந்தது ஓட்டுனருக்கு ஆச்சரியமாகிவிட்டது முதியவரை தூக்கிக்கொண்டு பெரிய கேட்டை திறந்துக்கொண்டு உள்ளே போய் கதவை தட்டினார் ஓட்டுனர்

முதியவர் சொன்னார் தம்பி இது என் மகனும் மறுமகளும் தங்கியிருக்கும் இடம், நான் தங்க அவன் எனக்காக ஒதுக்கிய அதோ அந்த ஓலைக்குடிசையப்பா நான் தங்குமிடம் அதோ அந்த ஓலைக்குடிசை,
என்னை அங்கே கொண்டுபோய் விட்டுவிடு என்றார்

என்னடா இது அநியாயம் மகனுக்கு பளிங்கு மாளிகை பெத்த அப்பனுக்கு ஓலை குடிசையா

மகன் கதவை திறந்து யாரு கதவை தட்டினது " என்று முகத்தில் எரிச்சல் எரிய கேட்கிறான்

நான்தான்..... ஆமாம்..என்னை உங்களுக்கு தெரியாது இல்ல...நான் ஒரு வழிப்போக்கன் இவரு உன்ன பெத்த தகப்பன் தானே, உன்னை பெரியவனாக்க படிக்கவைக்க ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவர இந்த சொகுசு பங்களாவை உனக்கு தாரை வார்க்க எத்தனை பாடு பட்டிருப்பார், ஜென்மத்த செருப்பால அடிச்சிக்கிட்டு ஒழைச்சி இருப்பார், உனக்கு காரு பங்களா அவருக்கு ஓலை குடிசை.... ஏன் பெரியவரே இந்த பங்களா உங்க அப்பா சம்பாதிச்ச சொத்தா இல்ல நீங்க தலையெடுத்து உங்க உழைப்பால வாங்கினதா

எங்க அப்பா இப்போதிருக்கும் என்னைவிட பிச்சைக்காரனாக வாழ்ந்துட்டு போய் சேந்துட்டான் ஆனா சும்மா சொல்லக்கூடாது படிக்க வச்சாருப்பா அது ஒன்னுதம்பா எனக்கு யாராலும் அழிக்க முடியா சொத்து அதை உபயோகப்படுத்தி நான் இந்த பங்களாவை சம்பாதிச்சேன் என் சொந்த உழைப்பால வாங்கினதுப்பா என்றார் முதியவர்

பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டா தாயை தவப்பனை
உடன் பிறப்புகளை சொந்த பந்தங்களை ஒதுக்கி நீ எத்தனை நாளைக்கு வாழ்ந்துடுவே உனக்கு ஒன்னு தெரியுமா, சீனியர் சிட்டிசனை தொல்லை படுத்துவோர் யாரா இருந்தாலும் அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க சட்டத்தில இடம் இருக்கு, நான் ஒரு லாயர் பெத்த தகப்பனை பிச்சை எடுக்க வைத்தவனை கோர்டுல இழுத்து நான் அவனை பிச்சை எடுக்க வைக்கமல் விடப் போறது இல்ல

இதையெல்லாம் கேட்ட மகனுக்கு ஹார்ட்டு அட்டாக் வந்தது போல் அதிர்ந்தான் லாயரிடம் மன்னிப்பு கேட்டான் இவ்வளவுக்கும் காரணம்...!!

என்ன.... என் பொண்டாட்டிதான் சார்ங்கிறீயா?

இல்லங்க சார் அவளும் சம்பாதிக்கிறா அதனால அவ சொல்லை தட்ட முடியல

ஏன் நீ சம்பாதிக்கிறது இல்லையா

நான் சிவில் இஞ்சினியர் ஒரு கான்ட்ராக்ட்டில பெரிய லாஸ் ஆயிட்டேன் அதனால வேறு கான்ட்ராக்ட் எடுக்க முடியல வீட்டோட இருக்கேன் அவ சொல்றபடி நடக்குது

அப்படின்னா அவுங்க சம்பளம் உன் கைக்கு வருவதில்லை இதானே பிரச்சனை யார்மா உள்ளே" ஓடிவந்தாள்

"சொல்லுங்க"

"அதோ அந்த சிமிட்டி மணல் ஜல்லிய கலக்கி கொடுக்கிற எந்திரம் யார் வாங்கினது"

"என் வீட்டுக்காரர்தாங்க"

"வாடகைக்கு போறது இல்லையா"

"போவுதுங்க"

"அதுக்காக வாங்குகிற பணம் எங்கே போவுது"

"ஏங்கிட்ட"

"அப்போ நீ சம்பாதிக்கிறதுல உன் புருஷனுக்கு பங்கு இல்லையா நீ சம்பாதிக்கிறே என்கிற ஒரே காரணுத்துக்காக நீங்க அவரை மதிக்கிறது இல்ல பருஷனையே மதிக்காதவ மாமனாரை மதிக்க சான்சே இல்ல, என்ன அம்மா வீட்டை பலப்படுத்துறீங்களா அதனால வந்ததுதான் இந்த தொல்லை ஏன்னா நான் என்கிற ஈகோ"

"ஐய்ய்யோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்க எனக்கு அம்மாவும் இல்ல அப்பாவும் இல்ல, வேறு அண்ணன் தம்பிகளோ, அக்கா தங்கச்சிகளும் கெடையாது, தெரிஞ்சோ தெரியாமலோ நடந்திட்ட தவறுக்கு மன்னிச்சிடுங்க"

"பொண்டாட்டிய காரணம் காட்டுறீயே
இத சொல்ல உனக்கு வெக்கமா இல்ல சோத்துக்கு பதிலா வேற எதையாவது வச்சி பொண்டாட்டி திங்கச்சொன்னா தின்னுவிடுவியா?"

மறுமகளும் வெளியில் வந்து "மன்னிச்சிடுங்க சார் இனிமே இப்படி எதுவும் நடக்காம பாத்துக்கிறோம் சார்"

"ஏம்மா மகன் மறுமகள் உயிரோட இருக்கும் போதே பெத்த தகப்பனுக்கு வயித்துக்கு கொடுக்காததால வெளியில போயி மாடிவீட்டு ஏழை போல பிச்சை எடுக்க விட்டு இருக்கீங்களே உங்களுக்கே வெக்கமா இல்லை, இதுவே உன்னோட அப்பா அம்மாவா இருந்திருந்தாக்கூட இப்படித்தான் நடந்துக்கிட்டு இருந்திருப்பீங்களா, மரியாதை கொறவா இல்ல , உங்க கூட வேல பார்க்கிறவங்க, உறவாடுறவங்க உங்கள மதிப்பாங்களா, இவரை வெளியில பார்க்கிறவங்க என்ன நெனைப்பாங்கன்னு நீங்க நெனைக்கிறீங்க, அவரு எடுக்கிற பிச்சையில தான் நீங்களும் சாப்பிடுறீங்கன்னு நெனைப்பாங்க, இது தெரியாதா உங்களுக்கு, நான் இதோட விடப் போறது இல்ல அடிக்கடி வந்து கவணிப்பேன், எவனோ ஒருவன் நான் எனக்கிருக்கிற பரிதாபம் கூட உங்களுக்கு இல்லாம போனதென்ன,
மொதல்ல அந்த குடிசையை பிரிங்க, பங்களாவுக்குள்ள ஒரு குடிசை,
யாரும் உங்கள கேலிப்பண்ண வில்லையா?"

"சாரி சார்...!! "

"இப்படியும் இன்னும் எத்தனை ஜென்மங்கள் இருக்கிறதோ தெரியவில்ல நாட்டிலே, பெத்தவங்களுக்கு சோறு போடாமல் அவர்கள் சம்பாதியத்தை மட்டும் உரிமை கொண்டாட புள்ளைங்க, அடிடா செருப்பால, ஹலோ மிஸ்டர் நான் மனித உரிமை குழுவில் ஒரு அங்கம், அங்க தெரியவச்சி கும்மியடிக்க வச்சிடுவேன் ஜாக்கிறதை நான் வர்றேன், பெரியவரே நான் வர்றேன், மிஸ்டர் உங்களுக்கே தெரியாம எங்க ஆளுங்க உங்கள கண்கணிப்பாங்க"

"சரிங்க சார்"

"அப்பாடா....ரொம்ப மெரட்டிவிட்டேனோ
அவனுக்குள், எப்படியோ நமக்கு ஒரு மன திருப்தி அது போதும் நமக்கு".
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி
( கண்டம்பாக்கத்தான்)

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (14-May-18, 9:31 am)
Tanglish : maati veettu aezhai
பார்வை : 269

மேலே