உள்ளம் இங்க வாடா

என்ன அண்ணே பையன்களுக்குப் பேரு வைக்கறதே பெரிய பிரச்சனையா இருக்கு.
😊😊😊😊😊
என்னடா உம் பிரச்சனை?
😊😊😊😊
எம் பையன் பொறந்ததும் ஒரு சோசியருகிட்டயும் எண்கணித சோதிடருகிட்டயும் பையன் ராசிப்படி என்ன பேரு வைக்கறதுன்னு கேட்டேன். ரண்டு பேருமே 'சித்தா'ன்னு பேரு வைக்கச் சொல்லிச் சொன்னாங்க. அந்தப் பேரையே நகராட்சில பதிவு பண்ணிட்டேன்
😊😊😊😊😊😊
. அப்பறம் என்னடா ஆச்சு?
😊😊😊😊😊
பள்ளிலே சேத்தேன். அங்க சில குறும்பக்காரப் பையன்கள் எம் பையப் பாத்தாவே 'சித்தர் சுவாமிகள்' வர்றாருன்னு கிண்டல் பண்ணாறாங்களாம். சோதிடர்கள் சொன்ன பேராச்சேன்னு வச்சது தப்பாப் போச்சே அண்ணே.
😊😊😊😊😊
சரி 'சித்தா'ங்கற பேருக்கு என்னடா அர்த்தம்?
😊😊😊😊😊
பையன்கள் சொல்லற 'சித்தர்'ங்கற அர்த்தமாத்தான் இருக்கும் அண்ணே.
😊😊😊😊😊
பெத்த பிள்ளைக்குத் தமிழ்ப் பேர வச்சா கேவலம்னு இந்திப் பேர வச்சே. அதுக்கு அர்த்தம் தெரிஞ்சாவது பேரு வச்சிருக்கலாமே.
😊😊😊😊😊😊
பெரும்பாலான தமிழர்கள் அவுங்க பிள்ளைங்களுக்கு அர்த்தம் தெரியாத இந்திப் பேருங்களத்தானே வைக்கறாங்க. அதைப் பின்பற்றி நானும் எம் பையனுக்கு அர்த்தம் தெரியாத இந்திப் பேர வச்சுட்டேன்.
இப்ப வேறு ஒரு பிரச்சனை அண்ணே.
😊😊😊😊😊
என்னடா வேற பிரச்சனை?
😊😊😊😊
நம்ம பக்கத்துத் தெருவில இருக்கற இந்தி ஆசிரியர் தமிழருவி சித்தாவைப் பாத்தாராம். அவம் பேரக் கேட்டாராம். அதுக்குத் தமிழ் அர்த்தம் தெரியுமான்னு கேட்டாராம். எனக்கே தெரியாததை சித்தா எப்பிடி சொல்லுவான். அப்பறம் அவரே சொன்னராம். "தம்பி நான் இந்தி ஆசிரியரா இருந்தாலும் என் தாய்மொழி தமிழ்.நாங்க வீட்டில கலப்படம் இல்லாத நல்ல தமிழ்லதான் பேசறோம். உன் வயசுல எனக்கு ரண்டு பொண்ணுங்க. ஒரு பொண்ணுப் பேரு பொன்மணி. இன்னொரு பொண்ணுப் பேரு பூமகள். உம் பேரு 'சித்தா' வுக்கு 'உள்ளம்'-ன்னு அர்த்தம்"னு சொன்னாராம் இந்தி ஆசிரியர். அவுரு சொன்னதை எம் பையனோட வகுப்பு மாணவன் ஒருத்தன் கேட்டுட்டானாம். அவன் அடுத்த நாள் சித்தா வகுப்பில நொழையற போதே "டேய் உள்ளம் வருதுடா. உள்ளம் இங்க வாடா"-ன்னு கூப்பிட்டானாம். இப்ப எல்லாப் பசங்களும் இவன "உள்ளம், உள்ளம்" -ன்னு கூப்படறாங்களாம். அதுதான் எனக்கு வருத்தமா இருக்குதண்ணே.
😊😊😊😊😊😊
அதுக்கேண்டா வருத்தப்படற. மகிழ்ச்சியான செய்தி. 'சித்தா'- வைத் தூக்கிட்டு உம் பையன் பேர 'உள்ளம்' னு மாத்துடா. உன்னப் பாத்து நாலுபேரு அவுங்க பிள்ளைங்களுக்குத் தமிழ்ப் பேருங்கள வைப்பாங்க. நேத்து நாளிதழ்ல ஒரு பிரபல பள்ளியின் முழுப்பக்க விளம்பரம். அந்தப் பள்ளில சாதனை படைத்த மாணவ, மாணவிகளின் நிழல் படங்களோட அவுங்க பேருங்களயும் போட்டிருந்தாங்க. அதில ஒரு மாணவியின் பெயர் 'உரைநடை'*.
"உள்ளம்" -னு உம் பையனுக்குப் பேரு வைக்க ஏண்டா வெக்கப்படற. இந்திப் பேருங்கள அவுங்க பிள்ளைங்களுக்கு வைக்கற தமிழர்கள்தான்டா வெக்கப்படணும். தமிழ்நாட்டிலயும் புதுச்சேரியிலயும் பல தலைமுறையா லட்சக்கணக்கான இந்திக்காரங்க வாழ்ந்திட்டிருக்கறாங்க. அவுங்கள்ல ஒருத்தருகூட தன் பிள்ளைக்குத் தமிழ்ப் பேர வைக்கல. தமிழர்களான நாமதாண்டா தன்மானம் தாய்மொழிப் பற்று இல்லாதவங்க.
இனியாவது நாம திருந்தணும். மத்த மொழிகளைப் பேசறவங்க நம்மள கேவலமா நெனைக்கூடாது.
😊😊😊😊😊
அண்ணே நீங்க என் அறிவுக் கண்ணைத் திறந்திட்டீங்க. ரோம்ப நன்றீங்க அண்ணே.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■* நாளிதழ் ஒன்றில் வெளியான ஒரு பள்ளி விளம்பரத்தில் கண்ட பெயர் 'உரைநடை'
தாய் மொழியை மதிக்காதது தாயை மதிக்காததற்கு சமம்.

எழுதியவர் : மலர் (14-May-18, 1:11 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : ullam inka vadaa
பார்வை : 157

மேலே