பத்திரிக்கையாளர் சிவா பிறந்தநாள் வாழ்த்துக்கவி

சிவா
நீ எழுபத்து ஆறில்
பிறந்த எழுத்து ஆறு
நீ தனபால்
எழுத்துலகிற்குத் தந்த தாய்ப்பால்
உன்னால் வாழ்வுபெற்றனர்
பலர் நீ தந்த வாய்ப்பால்
நீ நல்லப் பூக்களாய்
பலர் நட்புக்களைப்
பெற்றவன்
பத்திரிக்கையாளர் சங்கத்தின்
கொற்றவன்
நீ
புதுவையில்
பிறந்த புது வெய்யில்
நீர் நனைப்பதனால்
வெய்யில் நனைவதில்லை
நீ சித்திரையில்
கண்விழித்த சிந்தனைப் பிறை
நீ
சன் டிவியில்
பணிபுரிந்த சன்
சுசீலாவிற்குப் பிறந்த சன்
உன் பேனா வீணா
எதையும் எழுதுவதில்லை
உன் பேனாவில் நீல மையை
ஊற்றினாய்
சமூகத்தின் நிலைமையை
முடிந்தவரை மாற்றினாய்
உன் மூன்றாம் கை
பாண்டி வாய்ஸ் பத்திரிக்கை
பாண்டி யில்
சமூகத்தை சீரழிப்போர்க்கு
அது எச்சரிக்கை
உன் பத்திரிக்கையின்
பத்திகள் நல்லோர்க்கு அது கள்
பொல்லாரை வீழ்த்தும் கல்
பாண்டி வாய்ஸ் வியாழன் மாலை
புதுவை மக்கள் படிக்கும் மாலை
உனக்கோ இன்று
பிறந்தநாள் எனக்கோ
இன்று சிறந்தநாள்
உன் வாழ்க்கைத்தலம்
ஆரம்பித்து வைத்தது
வாழைக்குளம்
நீ எழுத்து மீன்களை
உன் வயிற்றில் சுமந்து
சமூகத்திற்கு விருந்தளிக்கும்
வாலிபக் குளம்
வாழட்டும் நூறாண்டும்
ஊராண்டும் பாராண்டும்
உன் குலம்
அன்பு நண்பருக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கவிஞர் புதுவைக் குமார்