காதல் மயில் காதலுக்கு கோரிக்கை
ஆண் மயிலாய் நான்
தோகைவிரித்து ஆடி வந்தேனடி
இன்னும் ஏன் தயக்கம் பெண்ணே
வா, வா, வந்து என் விரி தோகைக்குள்
வந்துவிடு, உன் அத்தான் நான்
காத்திருப்பேன் அள்ளிஅணைத்திடவே
காதல் மொழியால் மழைபொழிந்து
உன்னோடு உறவாடி மகிழ , இன்னும்
ஏன் தயக்கமடி , வருணன் அருளால்
வானமும் முகிலோடு எழிலாய்
விளங்க சிறு தூறலும் தந்து குலுங்க
என் மனதில் உன் மீது
காதலும் பொங்க, இன்னும் ஏனடி
தயக்கம் என்னோடு காதல் உறவாட
வா, வா, பெண்ணே வா, வந்து
என்னோடு கலந்துவிடு இதுபோல்
நேரம் இனி வருமோ.