அவன்
அவன்
=======
வாகனத்தில் அடிபட்டுவிடக்கூடும்
என்றஞ்சி தெருவில்
தாயைப் பிரிந்து தனியாகத் திரிந்த
நாய்க்குட்டியை பரிதாபப்பட்டு
எடுத்துச் செல்கிறான்
முதியோரில்லத்தில்
அம்மாவை பார்த்துவிட்டு
வீடு திரும்பும் அவன்.
*****
மெய்யன் நடராஜ்