Amma
பால் மனம் மாறா
பாலகர்களுக்கு
சொந்த கிராமத்திலே
அங்கன்வாடி...
பிஞ்சு குழந்தைகளுக்கு
ஒரு கிலோ மீட்டர் தூரத்தில்
துவக்கப் பள்ளி...
விளையாட்டு பிள்ளைகளுக்கு
மூன்று கிலோ மீட்டர் தூரத்தில்
நடுநிலைப்பள்ளி...
பருவம் அரியா பசங்களுக்கு
ஜந்து கிலோ மீட்டர் தூரத்தில்
உயர்நிலைப்பள்ளி..
விடலை பசங்களுக்கு
எட்டு கிலோ மீட்டர் தூரத்தில்
மேல்நிலைப்பள்ளி...
என்று வரையறை
செய்த அரசு
ஏனோ புரியவில்லை
மாநிலம் தாண்டி
நீட் நுழைவுத்தேர்வு.
அடி மாடுகளாய்...
செய்வது அரியது அண்டை மாநிலங்களில்...
அப்பனும் ஆத்தாளும்
அடிவயிறு எரிய
வேலை செஞ்சு
படிக்க வச்சா.....
ஆனாலும் முடியல
அரசாங்க தொல்லையால...
எரிமலையில எரிஞ்சாலும்
குழம்பாய் ஓடுவோமே தவிர
விழ்ந்து கருகிவிட மாட்டோம்...
நாங்கள் கேட்பது
உதவி அல்ல
உரிமை...
என்றும் மக்களுக்காய்
மக்களுடன்
மக்கள் பணியில்
டேவிட் சாமுவேல் ராஜா...