ஒரு பார்வை பார்த்தால் என்ன......

இறைவழியில் இறைவனை தேடி....
என் குறை சொல்ல
காலம் ஓடுகிறது......
குறைகள் மட்டும் தீருவதாகயில்லை...

இறைவா ...என்னை நோக்கி ♪♪♪♪
ஒரு பார்வை பார்த்தால் என்ன???
♥♥♥♥♥♥♥
அதிகாலை முதல் அந்திமாலை வரை உன் பின்னே சிறகடிக்கிறது என் மனம் .....

உனையே சுற்றி வரும் என்னை
ஒரு பார்வை பார்த்தால் என்ன?
♥♥♥♥♥♥♥
காலமே....நீ நாட்களை கடந்து வந்து நட்பெயர்
எடுத்து கொண்டாய்
மிண்டும் என் பழைய நினைவுகளுக்காக......

ஒரு பார்வை பார்த்தால் என்ன...
♥♥♥♥♥♥
வானமே...வையமே
தவிப்புகளோடு
தடம் புரண்டு கிடக்கிற என் வயல் நிலங்களை

ஒரு பார்வை பார்த்தால் என்ன??
♥♥♥♥♥♥
பொய்களே நீங்கள் அடிக்கடி உலகை வென்றாலும்
இந்த தாழ்மையானவனின்
மெய்யை......
ஒரு பார்வை பார்த்தால்என்ன???♥♥♥♥

வறுமையே வாட்டி எடுக்கும் வஞ்சகன் நீயென கண்டேன்...
என் திறமையை நீ....
ஒரு பார்வை பார்த்தால் என்ன???
♥♥♥♥♥♥

எழுதியவர் : poetrameshbharthi (16-May-18, 1:39 pm)
சேர்த்தது : poetrameshbharthi
பார்வை : 68

மேலே