ஈழத் தமிழ் வீரர்களும் , கோழைகளும், துரோகிகளும்

முல்லைத்தீவில் சிங்கள முப்படை முற்றுகையிட
பதினான்கு தேசங்கள் சிங்கள படைக்கு உதவிட
இந்தியாவும், சீனாவும், பாக்கிஸ்தானும் ஒற்றுமையாய்
ஒன்றாக கைகோர்த்து தமிழர் படைக்கு எதிராகப் போராட
நண்டுகள் தவழும் நந்திக் கடலோரம்
வற்றாபளை பத்தினி தெய்வதின் பார்வையில்
பீரங்கச் சத்தத்தில் பீச்சிட்டு 2009 05 18 இல்
தமிழ் வீரர்கள் இரத்தம் ஆறாய் ஓடியதே.

நேருக்கு நேர் போர் புரிய முடியாத கோழைகள்
பல தேசப் பணத்தொடும், செய்மதி அவதானிப்போடும்
ரோ என்ற புலனாய்வு ஒற்றர்களின் செய்திகளையும்
பிற நாட்டு ஆயுதங்களையும் , ஆலோசனைகளையும்,
பண்டார வன்னியன் படை போல் தமிழன் புலிப் படை
சிங்கள, துரோகிகள் படையை எதிர்த்துப் போராடியதுவே
தர்மம் போதிக்கும் நாட்டில் அதர்மம் தலை தூக்கி நின்றதுவே

முப்பது வருடங்களில் முப்படைகளை உருவாக்கி
தனி ஈழ நாடுக்காக தனித்து நின்று போராடிய
தமிழ் மாவீரர்களுக்கு எம் தலை தாழ்த்திய வணக்கங்கள்!
வரலாற்றுத் துரோகிகள் எட்டப்பன் எதிர்மனசிங்கன் போல்
பணத்துக்கும, மந்திரி பதவிக்கும் புலிப் படையை காட்டிகொடுத்த
துரோகிகள் சேர்த்த கர்மாக்களுக்கு ஒரு நாள்
நிடச்யம் பதில் சொல்லியாக வேண்டும் .
முல்லிவாய்க்காலில் குத்திய முள்ளுக்களின் வடுக்கள்
ஈழத் தமிழன் மனதை விட்டு என்றும் அகலாது.
***

எழுதியவர் : பொன் குலேந்திரன் – கனடா (16-May-18, 2:41 pm)
பார்வை : 60

மேலே