குழந்தை

நீ பேசும் மொழி
இவ்வுலகில் இல்லையம்மா

நீ கண்சிமிட்டும் வேலையில உன்னை கண் இமைக்காமல்
பார்ப்பேன்னம்மா

நீ மெல்ல முட்டி இட்டு
நான்கு கால்களால் நடக்கயில
நானும் நடந்து பிடிப்பேன்னம்மா

நீ சாப்பிட அடம் பிடிக்கயில
நான் உன்னை ஏமாற்றி
ஊட்டுவேன்னம்மா

நீ அடுக்கிய பொருளை கலைக்க
நான் மீண்டும் மீண்டும்
அடுக்குவேன்னம்மா

முன்னபல் வளர என் கை
கடிக்க இந்த விளையாட்டை
ரசிப்பேன்னம்மா

சித்திரமே என் சிற்பமே
தேன் சிந்தும் என் தேன் குழலே
முத்தே மணி ரத்தினமே
முத்தம் சிந்தும் என் செல்லமே

ஓடி வா என் மடியில் உட்கார்ந்து
கதை பேச வா !!!

எழுதியவர் : உமா மணி படைப்பு (18-May-18, 11:43 am)
Tanglish : kuzhanthai
பார்வை : 68
மேலே