சொல்ல நினைக்கும் கதை 6
ஆம் அன்று பணியை முடித்து விட்டு வந்த அவளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டில் அம்மா, அப்பா அவர்கள் தன் தாய் மாமன் கூப்பிடுவதாக கூறினர்.
அவளும் தான் கைபேசியில் பேசுகிறேன்என கூற அப்பா தான்
இல்லை நேரில் பேச வேண்டும் என கூறினார்.
ஒன்றும் புரியவில்லை அவள் வீட்டிற்கும் தாய் மாமன் வீட்டிற்கும்
ஒரு கிலோ மீட்டர் தொலைவு நடந்து கொண்டே என்னவாக இருக்கும்.
என்ன நடக்க போகிறது.
நான் தவறு எதுவும் செய்யவில்லையே
என்ன நடக்க போகிறது என யுகிக்க முடியலையே என்ன பண்ணலாம்.
யோசித்து யோசித்து அவள் தாய் மாமன் வீட்டின் அருகே வந்தாள்.
வழியில் அவள் பெரியப்பா, கடையில் இருக்க அவர் அவளை அழைத்து என்னம்மா ரெடியா?
கல்யாண பெண்ணே என் அழைத்தார்.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை.அழ தொடங்கினாள்
கூறினாள்.பயம் வந்து விட்டது அரசு
இடம் பேச கைபேசியும் இல்லை. அவனிடம் தகவல் சொல்ல முடியும் இல்லை.
சரி தாமே எதிர் கொள்வோம் இந்த பிரச்சனையை என கூறி தாய் மாமன் வீட்டிற்கு சென்றாள்.அங்கே
இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே கூப்பிட அவள் போக மறுத்தால் பிடிவாதம்.அழுகை அவளின் மாமா பெண்ணும் காதல் திருமணம் தான்.போராடினாள்
எனக்கு கல்யாணம் வேண்டாம் என்னால் பண்ணிக்க முடியாது.
அழைத்தாள்,பிரந்தாள் மொத்த சொந்தங்களும் அங்கே கூடியிருந்த இருக்க காரணம் சொல்ல முடியவில்லை.
கிட்டத்தட்ட 5 மணி நேர வாக்குவாதம்
போராட்டம் அழுகை, அம்மா, அப்பாவின் முரட்டல் அப்போது கூட அவள் தடுமாறவில்லை.
தன் நிலை மாறாமல் அத்தனை பேருக்கும் எதிராய் நின்றால் தன்
காதலுக்காக, தன் அரசுக்காக
என்ன நடந்தாலும் விட்டு விட கூடாது
என் உறுதி ஒரு பெண்ணாய்
அனைவரையும் எதிர்த்து நின்றாள்.