காதலர்கள் கவனத்திற்கு பகுதி 9
1 காதல் எனக்கிடும்
எல்லா ஆணைகளின் இறுதியிலும்
அவள் பெயரே மிளிர்கின்றன
கையொப்பமாய்
2 நிலவைக் காட்டி சோறூட்டுகிறாய்
பக்கத்து வீட்டு குழந்தைக்கு
பசிக்கிறது எனக்கு(ம்)
3 நீ செல்லக் கோபம் கொண்டிருந்த
ஓர் காலையில்
‘உன் கோபம் பிடித்திருக்கிறது’ என்றேன்
‘உன் தூபம் பிடிக்கவில்லை’ என்றாய்
‘உன் கொலுசொலி பிடிக்கும்
கொஞ்சம் நட’ என்றேன்
கழட்டி கையில் பொத்திக்கொண்டு
பழிப்பு காட்டி சிரித்தாய்
‘இந்தச் சிரிப்பும் பிடித்திருக்கிறது’
உடனே மௌனமானாய்
‘உன் துப்பட்டாவும் பிடித்திருக்கிறது’
அப்போது உண்மையாகவே
நீ கோபம்கொண்டாய்
அட அதுவும்கூட அழகுதான்