அவள் வருவாளா
அது பல அடுக்குமாடி
குடியிருப்புகளுக்கு
கொண்டு சேர்க்கும் பாதை
வண்டிகளோ நடமாட்டமோ
குறைந்தளவே காணப்படும்.
வேம்பு புன்னை போன்ற
மரங்கள் வளர்ந்து
நிழலை தந்து கொண்டிருக்கும்.
மாலை நான்கு ஆனதும்
புது மாடல் மோட்டார் சைக்கிளில் இளஞ்ஜோடி
புன்னைமர நிழலில்
காதல் செய்வார்கள்!
அவர்கள் தோலின் நிறம்
உடை பேசுகிற மொழி யென
அனைத்தும் உயர் வகுப்பினைச்
சார்ந்தவர்களென சொல்லும்.
மழையோ!வெயிலோ!
கையில் குடையிருக்கும்.
வண்டியின்மீதுதான்
அமர்ந்திருப்பாள் அவன்
நின்றிருப்பான்.
அவன் கைகயை பிடித்திருப்பாள் -அவன் அவள்
கூந்தலை காதோரம்
சொருகி கொண்டிருப்பான்.
கொஞ்சம் மௌனம்
கொஞ்சம் சிரிப்பு
கொஞ்சம் பேச்சு
அதிக உரசல்கள்.
எங்கோ பிறந்த சண்டை
அங்குதான் சமாதானமாகும்!
ஒருசில சமயங்களில்
அங்கேயே சண்டைகள்
பிறக்கும் பின் அங்கே
அப்போதே சமரசம் பிறக்கும்.
மாலை ஆறானதும்
இருவரும் கிளம்புவார்கள்.
பல மாதங்களாக அவர்களை
காண முடிவதில்லை!
ஒருவேளை இருவருக்கும்
திருமணம் நடந்திருக்கலாம்!
இல்லையேல்
பிரிந்திருக்கலாம்!
சாதி வெறியர்களால்
வெட்டப்பட்டிருக்கலாம்!
இருவரும் வந்தால் இந்த
புன்னைமரம் பூக்களைத்
தூவலாம்!
அவன் மட்டும் வந்தால்
கண்ணீரால் நனைக்கலாம்!
அவள்....
வருவாளா???
சமுதாய சிறையிலிருந்து
மீண்டு....