மாமனிதர் வாழியவே
உழைத்துக் களைத்த
உடலானாலும்
உள்ளத்தின் உறுதி
குறையாமல்
காலத்து சூழலின்
சுழற்சியால்
வாழ்ந்திட வையத்தில்
உள்ளவரை
கையேந்தி பிழைக்க
மனமின்றி
கொடுத்துத் தேய்ந்த
கரங்களால்
தொடுத்து பூக்களை
விற்பதனால்
ஒருவேளை பசியாற
வழிதேடும்
தேகம் தேய்ந்திட்ட
நிலையிலும்
அகத்தின் உறுதியும்
குன்றாமல்
வாழ்ந்திடும் மாமனிதர்
வாழியவே !
பழனி குமார்