முதுமொழிக் காஞ்சி 66
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
உறுவினை காய்வோன் உயர்வுவேண்டல் பொய். 6
- பொய்ப் பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் மிக்க கருமம் செய்வதற்கு வெறுத்து சோம்பேறியாயிருப்போன் தனக்கு உயர்வும், மேன்மையும் வேண்டுவது பொய்யாகும்.
'தக்க கருமம்' - பிரதிபேதம்
(ப-ரை.) உறுவினை - மிக்க கருமத்தை, காய்வோன் - செய்யாமல் வெறுப்பவன், உயர்வு வேண்டல் - மேன்மையடைய விரும்புதல், பொய் - பொய்யாம்.
ஆக்கம் - மேன்மேல் உயர்தல்.
உறுவினை என்பதை வினைத்தொகையாகக் கொண்டு, பயன் பெறுதலான காரியம், கைகூடத்தக்க காரியம் என உரைப்பதும் பொருந்தும்.
'உறுவினைக்(கு) அயர்வோன்.' - பாட பேதம் (அயர்வு - சோர்வு)