நிழலில் தேடிய நிஜம்
ஜீவனத்தை வயலில் தேடியது நிஜம்
ஆவணத்தை புயலில் தேடியது நிஜம்
நிஜத்தையதன் நிழலில் தேடிய நிஜம்
வாழ்க்கையில் நடப்பது இது சகஜம்
நிழலைக் கண்டு மிறள்வதுண்டு
சுதாரித்து காணும்போது அங்கே
நின்றிருக்கும் நிஜத்தைக் கண்டுக்
கொண்டு அச்சம் போவதுண்டு
ஒளிக்கு உகந்தவன் ஞாலன்
நிழலினை தகற்பவன் காலன்
எறும்புகள் ஊரட்டும் கல் தேயட்டும்
அதுவே நமக்கும் நடைபாதையாய் அமைய ஆய்வு செய்யப் படுகிறது
சற்று பொருமையாய் இருப்போமே
எனில் நிழலில் தேடிய நிஜம் ஆகா
பாறையில் நார் உரிக்கப்படுகிறது
அதிலே மலர்களை சரம் தொடுத்துஇந்த
மாலைச்சூடி மரியாதை செய்வோம்
எனில் நிழலில் தேடிய நிஜம் ஆகா
புழுக்கள் கூடு கட்டும் போது பட்டு
நூலெடுத்து பட்டாடை நெய்திட்டு
உடுத்தி அழகு பார்த்திடலாம் நன்கு
மரியாதை போகாமல் காத்திடலாம்
எனில் நிழலில் தேடிய நிஜம் ஆகா
கட்டித் தங்கம் வெட்டி எடுக்கட்டும்
மூச்சுத் திணறி முத்து எடுக்கட்டும்
ஆபரணமாய் அணிவிக்க சொல்லி
சீதனமாய் கொணர்ந்து சேர்ப்பேன்
முதலில் தாலியை கட்டிவிடுவாயா
எனில் நிழலில் தேடிய நிஜம் ஆகா
காவேரி மேளாண்மை வாரியம்
அமைந்தப்பின் தண்ணீர் வரும்
விவசாயிக்கும் வழி பிறந்துவிடும்
தாகம் தீர்த்துக் கொண்டிடலாம் அது
வெக்கை தாகமோ இல்லை வேறு
வெக்கங்கெட்ட தாகமோ தெரியாது
அதுவரை பொருத்து இருப்போமே
சற்றும் சிறு துரும்பை கிள்ளிப்
போட்டறியாத பொருப்பாளிகள்
தம் புஜம் சற்றும் அசைக்காதார்
கெஜம் கெஜமாய் பீற்றிடுவார்கள்
இந்நிழலில் தேடிய நிஜம் பூஜியமே
பசுவின் ரத்தம் பாலாகிறது கரந்திட்ட
பாலிலே தண்ணீர் சேர்கிறது அதை
அருந்தும் சிசு எங்கே ஒடியேறுகிறது
நிழலில் தேடிய நிஜம் கிடைக்கப்
பெறவில்லை இது நாள் கொண்டு
நிஜமும் இல்லை நிழலுமில்லை எனில்
இவ்வுலம் வாழ்விக்கும் உலகேயில்லை;
நிஜத்தை விட்டு நிழல் மறைந்து போகும்
இறப்பதனாலே; வேறு ஒரு புதிய நிழல் உருவாகிவிடும் உயிர் பிறப்பதனாலே
உதவுவோரை கடவுளென கொள்வார்
காப்பவர் ஒளியில் நிழலாக திகழ்வார்
அந்நிழலின் மதிப்பீட்டினை அதன் கீழ் அமர்ந்து இளைப்பாறுவோரேயன்றி
யாராலும் நிர்ணயித்துவிட இயலாது
இவர்களின் உதவியால் உயிர் வாழ்வார்
நிழலில் தேடிய நிஜம் காப்பவராவார்
•••••••••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
**நிழலில் தேடிய நிஜம்**
கவிதைமணியில்