காதல்

ஏழு வண்ணங்களுக்குள்
ஆகாயத்திக்குள் வானவில்லின்
அழகு இப்படி அடக்கிவிடலாம்
வானவில்லின் எழிலை
ஆரணங்கே,உந்தன் ஏழிலைக்கண்டு
அந்த மன்மதனும் மயங்கி இருக்கக்கூடும்
அத்தகைய உந்தன் எழிலை
கவிதையின் சில வரிகளுக்குள்
அடைக்க நினைத்தால் அது நடவாது
காவியம் பாடிடலாம் ஆனால்
அதை முடிப்பதற்குள் மூப்பு
என்னை வந்து தாக்கிடுமோ
அதனால் பயந்து, பெண்ணே
இப்படி சிற்சில வரிகளால்
பாடி, பாடி உன் அழகை
ரசிக்கிறேன் ..........முழுவதும்
நான் பாடி முடிப்பதற்குள்
என்னை நீ ஏற்பாய் என்ற
நம்பிக்கையில்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-May-18, 4:51 pm)
Tanglish : kaadhal
பார்வை : 54

மேலே