கங்கையிர்ப் புனிதமாய காவிரி எங்கள் காவிரி

கங்கை நதியாய்ப் பிறந்தாள் மாலவன்
தூய பாதத்தில், தூயவளாய் அவள்,
பின்னே முக்கண்ணன் சிரசில் தங்கிவிட,
பகீரதன் ஒற்றைக்காலில் தவமிருக்க
பதினாயிரம் ஆண்டு சிவனார் சிரஸிலிருந்து
விடுபட்டு இமயத்தின் மடியில் தவழ்ந்து
இந்து சமவெளியில் மாநதியாய் ஓடுகிறாள்
தூயவள் அவள் ஓடும் நதியில் வீழ்ந்திடும்
மாசு அத்தனையும் ஏற்றாள் சுமந்தாள்
கரைந்தன மாசு அத்தனையும், கங்கை தூயவள்.


முக்கண்ணன் அவன் ரௌத்திரம் கொண்டவன்
ருத்திரன் அவன் சிரசில் தங்கியதால் கங்கை
ரௌத்திரி,ஆயின் ,திருமால் பாதத்தில்
உதித்த காவிரியோ புனித கங்கையைவிட
தூயவள் ஆனாள், ரௌத்திரம் ஏதும் இல்லாது
அதனால்தானோ விப்ரநாராணரும் பாடினார்
திருமலையில்,'கங்கையிற் புனிதமாய
காவிரி'என்று .......... என்று வந்து மீண்டும்
இங்கு ரங்கன் பாதம் சரணம் என்று
ஸ்ரீ ரங்கத்திலே நிலைத்திடுவாள் எங்கள்
புனித காவேரி.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-May-18, 2:04 pm)
பார்வை : 61

மேலே