அப்பா

நான் தேடியும் கிடைக்காத
தொலைந்துபோன என் முதல் காதல் நீயே......
அந்த நாள் நினைவிட
உனக்காக நான் ஏங்கிய நாள் கொடுமையானது....
விழியில் நீர் கொண்டு ஜன்னல் வழி
பார்க்கிறேன்.......உன் உருவமாய்
மேகமும் ஒரு துளி நீர் சிந்தி
கலைந்துபோகிறது.......
வெட்டவெளியில் தேடிப்பார்க்கிறேன்
தொலைந்து போன உன்னை
மீண்டும் வருவாயோ என்று....