சிலைகளை உடைத்தாலும் சிதையாது கொள்கை - கவிஞர் புதுவைக் குமார்

சிலைகளை
உடைத்தவனுக்குத் தெரியுமா
உடைந்தது சிலையல்ல
சமூகத்தை மாற்றப் போராடிய
மாமலை என்று
காவல் துறை சிலை
உடைத்தவனுக்கு
வலைபோடாமல்
விலைபோய்விட்டு
இலைபோட்டது
திரிபுராவில்
சுற்றித்திரிந்த சமாதனப் புறாக்களைக்கூட
சமைக்கக் கொன்றார்கள்
கருப்பு ஆடை அணிந்தவர்கள்
ஒருபோதும் கருப்பு ஆடாய் இருந்ததில்லை
அவர்கள் வெள்ளாடை அணித்ததனால்
ஏழைகளை வெள்ளாடுகளாய் வெட்டினார்கள்
நாட்டின் பாவக்குப்பையை
அவர்கள்மீது கொட்டினார்கள்
சமத்துவத்தின் மீது சவத்துணியை
மூடாதீர்
மாலையைப் போடவேண்டிய
மலைக்கழுத்தில் துளையைப் போடாதீர்
விழுந்தது கற்சிலைகள்
விளைந்தது பொற்சிலைகள்
அம்பேத்கார்
ஒடுக்கப்பட்டோர்
ஏற்றப்பிறந்த அம்பாசிடர்கார்
அவர்களுக்கு ஆதரவாய்
அம்பேந்தியக்காரர்
லெனின்
ரஸ்யாவின் தலையெழுத்தை
தன் கையெழுத்தால்
மாற்றியவர்
பெரியார்
தன் காயத்தை தாங்கிக்கொண்டு
சமூகத்தின் வெங்காயத்தை தோலுரித்தவர்
எத்தனை சிலைகளை
உடைத்தாலும் அலைகளாய்
எழுவோம் திருத்துவதற்கு அந்த எத்தனை
சிலை சிதையும்
சிந்தனை சிதைவதில்லை