எதிர்காலம் என்னாகுமோ
காலம் கடக்கின்றது
கருணையும் கரைகின்றது
கோலம் மாறுகின்றது
கொள்கைகள் கரைகின்றது
இதயமும் கல்லாகின்றது
இரக்கமும் அரிதாகின்றது
ஏழ்மையும் உழல்கின்றது
எண்ணங்கள் குறுகுகின்றது
கொடுப்பது இல்லையாகுது
கொள்ளைகள் திடமாகுது
உழைப்பது சிரமமாகுது
ஊதியம் பற்றாக்குறையாகுது
வாதங்கள் பெரிதாகின்றது
நற்சிந்தனைகள் குறைகின்றது
காரணங்கள் ஏதுமாகின்றது
குழப்பங்கள் தூக்கலாகின்றது
சுயநலன்கள் மேலெழுகின்றது
பிறர்நலங்கள் தாழ்கின்றது
ஏற்றங்கள் நிஜமற்றவையாகுது
இறக்கங்கள் நிழலென்றாகுது
கல்வியே காசாகுது
கற்றவை விலையாகுது
பெற்றவர் மயங்குகின்றனர்
எதிர்காலம் என்னவாகுமோ