சிகரம் தொடலாம்

#சிகரம் தொடலாம்

எழுந்து வா இளைஞனே
நீ சாகப் பிறந்தவன் அல்ல
சாதிக்கப் பிறந்தவன்...
உட்கார்ந்து இற்றுப் போவதை விட
ஏதேனும் ஒரு லட்சியத்திற்காக
உழைத்து
தேய்ந்து போகலாம் வா...

எழுந்த வா இளைஞனே!
சிகரம் தொடலாம்
உன் பயணத்தை தொடங்கு
பாதையில்லை என்று தயங்காதே!
உன் பாதத்தைத் தேய்த்தாவது
ஒரு புதிய பாதை போடு
உன் பாதச் சுவடுகள்
காலச் சரித்திரத்தில் பதியட்டும்.

அரசியல்வாதிகளின் ஊழலையும்
அண்ணிய நாட்டவரின்
அத்து மீறல்களையும்
ஆன்மீகவாதிகளின்
ஏமாற்றுதலையும்
பணக்காரர்களின்
திமிரையும்
அன்றாடம் நடக்கும்
அநீதிகளையும்
ஏழைகளுக்கு எதிரான
கொடுமைகளையும்
உன்னால் மட்டுமே!
தடுக்க முடியும்...
பழைய இந்தியாவை
புதிப்பித்து தர முடியும்
சிகரம் தொடலாம்
வா இளைஞனே!

நீ நடக்கத் தொடங்கினால்
பாதைகளுக்கு கூட
பஞ்சம் வரலாம்....
நீந்துவதற்குத் தயாரானால்
குமரி கடலும் குளமாகும்...
பறப்பதற்கு முயற்சி செய்தால்
பால்வழி அண்டம் கூட
சின்னஞ் சிறிய கண்டமாகும்...

உன்னில் இல்லாதது எதுவும்
மண்ணில் இல்லையட...
உன்னில் இருக்கும் ஆற்றலுக்கு
எல்லை என்பதே இல்லையட...
நீ மனம் வைத்தால்
காற்றுக்கும் வடிவம் கொடுக்கலாம்
விண்மீன்களிலும் பூக்கள்
தொடுக்கலாம்
நீ எழுச்சியுடன் எழுந்தால்
எவரெஸ்ட் சிகரம் கூட
தோற்று போகும்....
வா இளைஞனே சிகரம் தொடலாம்...!!!

படைப்பு

கவிதை ரசிகன் குமரேசன்

வாட்ஸஅப் நெம்பர் 8883661977

எழுதியவர் : கவிதை ரசிகன் (30-May-18, 4:13 pm)
Tanglish : sikaram thodalaam
பார்வை : 788

மேலே