புன்னகை நிலவு
![](https://eluthu.com/images/loading.gif)
புன்னகை நிலவு
கார் மேகங்களின் இதழ் ஓரத்திலே,
சிறு புன்னகையாய் பிறந்தாயடி !
வின்மீன்களின் ஓர பார்வையிலே,
வெட்கத்தில் உந்தன் புன்னகை பூப்பெய்ததடி !
நீலவானம் காதோடு கதைசொல்ல,
ஆனந்த சாடலில் உன் புன்னகை வெளுத்ததடி!
பார் கன்னிகள் துயில் கொள்ள,
துகில் துறந்த புன்னகை முழுமதியானதடி!
உன்னோடு உன்னவன் புணர,
பார் காளையர் காணா இருள்படை சூழ,
புன்னகை துறந்து இருள்மதியானாயடி!!!
உங்கள்
தௌபீஃக்