எழுதி நடத்துவதல்ல எழுச்சி போராட்டம்

எழுதி நடத்துவதல்ல
எழுச்சி போராட்டம்
எழுகின்ற ஓலக்குரல்
(இருபது) வருட வருடமாய்
கேட்கவேண்டியவர்களால்
கேட்கப்படவில்லையென்றால்
கேட்க மறுத்தால்,
சொல்லிக்கொண்டு வராது
போராட்டம்.
வசனம் பேசி வருவதல்ல
போராட்டம்.
வாய்கிழிய பேசினால் ஆகாது
போராட்டம்.
கலம் இறங்கி
காலம் பார்க்காது
காலன் கண்டு அஞ்சாது
கடப்பது போராட்டம்.

போராட்டம் நடத்தினால்
சுடுகாடாகிப்போகுமாமே.
என்னோ அறியாமை!
போராடாமல்
கிடைத்ததா இந்த சுதந்திரம்.
உழைப்பவனின் உரிமை முதல்
ஓட்டுரிமை,
பெண்ணுரிமை,
வெள்ளித் திரையில்
சுட்டெரிக்கும் வசனம்பேசி
பிறகு
அரசியல் பதவிப் பெற
எல்லோரும் ஆகலாம்
என் நாட்டு மன்னர் என்றே
உரிமை சும்மா கிடைத்ததா?
எல்லோரும் சமம் என்கின்ற உரிமை
எல்லாருக்கும் உணர்த்திட
எல்லோரும் உணர்ந்திட
உள்ளோர்க்கும்
உரிமை உள்ளோர்க்கும்
உரிமை இல்லார்க்கும்
இடித்துரைக்கத்தனே
இத்துணை போராட்டம்.
யாராவது போராடி
பெற்றுத்தந்தால்
நல்லது பேசுவதுபோல்
போராடும் மனித குணத்தை
போராடும் மனித இயல்பை
குதர்க்க பார்வை பார்க்கும்
பார்வைக்கு புரியவைக்க
ஒரு போரட்டம்
அறிவு போராட்டம் வேண்டுமோ.
மறந்து விடாதே
மாமனிதா
வாழ்கின்ற மக்கள் பெற்றுள்ள
வாழ்வு உரிமையாவும்
வாழ்ந்த்திட்ட மக்களின்
போராட்டமாகும் .

எழுதியவர் : இராமானுஜம் மேகநாதன் (31-May-18, 9:54 pm)
பார்வை : 51

மேலே