அண்ணே நலமா

அண்ணே நலமா?
தமிழனுக்கு வரையரை வகுக்கும்
செந்தமிழண்ணே நலமா?

பிணத்தினூடே அரசியல்
மரண வியாபாரிகளே
நலமா?

உங்கள் பிள்ளை குட்டிகள்
நலம்தானே?
உற்றார் உறவினர்
அவரவர் வீட்டில்
நலம்தானே? மகிழ்ச்சி!!!

உங்கள்
மயிர்கூச்செரியும் பேச்சையும்
நாடி நரம்பு புடைக்கும்
தமிழ் சொல்லாடலையும்
கேட்டு
உயிர் கொடுத்துதவ
அப்பாவி தம்பிமார்கள்
நாம் தமிழர் பலருள்ளோமே!!!
பிறகு
அவர்களெதற்கு???

நீங்கள்
களத்தில் உள்ளவரை
களம் வெறும் போராட்டக்களம்...
நீங்கள்
சென்றபின்னே
மாறுகிறது போர்களம்...
நீங்கள்
மட்டும் இருந்திருந்தால்
விட்டிருப்பீரோ?? உங்கள்
மார் திறந்து - உங்கள்
தம்பி"மார்”களையும்
தாய்"மார்"களையும்
காத்திருக்க "மாட்டீர்" !!!
நீங்கள்
இல்லாத தைரியம் இந்த
காவலர்களுக்கு!!! எங்கள்
மாரைத் துளைத்துவிட்டனர்....

போகட்டும்...
போனது பத்தயிர்தானே ??
மீதமிருக்கும்
தம்பிகளை புத்துயிர் செய்...
அதனூடே
அரசியல் செய்... உனக்காகத்தான்
களம் சேர
தம்பிமார்கள் நாங்கள்
உள்ளோமே???

மீண்டும் கேட்கிறேன்
அண்ணே நலமா????
-இவன்
தம்பியுள் ஒருவன்

எழுதியவர் : திருக்குழந்தை (1-Jun-18, 7:41 pm)
Tanglish : anne nalamaa
பார்வை : 74

மேலே