காதல் கருப்புப் பணம்
நான் அவளை
காதலிக்கிறேன்
ஆனால் இதுவரை
நான் அதை
அவளிடம் சொன்னது
கிடையாது
அவள் மீது கொண்ட
காதலை நான்
பதிக்கி வைத்தேன்
கருப்புப் பணத்தை போல
அதை யாருக்கும் தெரியாமல்
பாதுகாக்க
அந்நிய முதலீடு போல
என் இதயத்தில் முதலீடு
செய்து வைத்தேன்
ஆனால் எப்படியோ
என் காதலை கண்டபிடித்து
அதை கைப்பற்றி
தனதென்று கையகப்படுத்தி
பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டது
வருவாய் துறை
உயர் அதிகாரிப் போல
அவள் இரு கண்கள்.....!!!!

