எனக்காக பொய் யுரை

வெட்டிட வெட்டிட
துளிர்க்க இதென்ன
செடியா?மரமா?
என் மனம்!

காயங்களை உண்டாக்க
கூர்மையான வாள்
தேவையில்லை என்பதை
நீயென்னை தவிர்ப்பதில்
உணர்த்தி விடுகிறாய்!

நான் சோகத்தை ஆடையாக
தரித்திருக்கிறேன்!
நீயோ முகத்தை பொலிவாக்க
ஒப்பனைகளை
செய்து கொண்டிருக்கிறாய்!

கூப்பிடும்
தூரத்தில்தான் நான்!
யார் கூப்பிட?யென்ற
கேள்வி எழுகிறது!

உன் அமைதி என்னை
அலங்கோலமாக்குகிறது!
எனக்காக ஒரு பொய் யுரை!
இனி இரைக்க கண்ணீருமில்லை!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (3-Jun-18, 11:45 pm)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 151

மேலே