தோல்வி காதலுக்கு மட்டுமல்ல-நட்பின் தோல்வி !!!

நான் அழுகிறேன்
நீயும் அழுகிறாய் ...
மீண்டும் அழத்தோன்றுகிறது மகிழ்ச்சியாய்
உன்னை அழவைத்து பார்ப்பதற்க்கல்ல
உன் கண்ணீரிலிருந்த உப்புக்கரிக்காத தூய்மையான நட்பை மீண்டும் ஒருமுறை உணர்ந்து பார்த்திட ...

நான் சிரிக்கிறேன்
நீயும் சிரிக்கிறாய் ...
சான்றோர்கள் சொன்னாற்போல்
என் மகிழ்ச்சி இரட்டிப்பாவதை உணர்கிறேன் உன்னாலே ...

நான் துடிக்கிறேன்
நீ அரவனைக்கிறாய் ...
ஆனால் எனக்கோ கோபம் வருகிறது
உன் அன்பை காண்பதற்க்காகவே என்னுள்
வலிகள் வருகின்றனவோ என்று ...

என் வெற்றி
நம் மகிழ்ச்சியாகிறது ...
சுயநலமில்லா உன் நட்பை
சரித்திரத்தில் பதிக்க நினைக்கிறேன்
போட்டியிட யாரும் உண்டோ
எனக் கேட்கிறேன் பெருமிதத்துடன் ...

நட்பின் ஆழத்தை நான் அறியும் முன்னே
நீ அறிந்துவிட்டதற்காக வருந்துகிறேன் ...
வாய்ப்பு வருவது ஒருமுறைதான்
அதற்கு நட்பும்கூட விதிவிலக்கில்லை
என புரிந்துகொண்டேன் இன்று ...

கடல்போல் இருந்த உன் அன்பை உணர்தேன் ஒரு நொடியில்
ஓடோடி வந்aiதேன் அருகினிலே ...
அனைத்தும் கலைந்ததே கானல் நீராய்
பயத்துடன் தேடுகிறேன் எங்கும் ...
அது மழையாய் மாறி வேறொரு நிலத்தில்
பொழிவதை கண்டேன் ...
அழுவாத சிரிப்பதா என்று தெரியவில்லை

ஆனால்...

மீண்டும் எழுகிறேன் ...

மண்ணில் விழும் துளிகள் ஒவொன்றையும்
என் கடலில் சேர்க்க முனைந்தேன் முடிந்தவரை
ஆனாலும் முடியவில்லை ...

"இன்றும் அழுகிறேன்
துடைக்க உன் கரமில்லை
அருகில்தான் இருக்கிறாய் நீ...
வேறொருவரின் கண்ணீரை ஏந்தியபடி !!! "

உன்னை விடவும் முடியவில்லை !!!
தொடரவும் மனமில்லை !!!
விடையில்லா கேள்விக்குள் சிக்கிக்கொண்டு தவிக்கிறேன் !!!
விடையாக நீ வருவாயா ஏக்கத்துடன்
பார்க்கிறேன் ஆனால்...
இன்றும் நீ விடுகதையாய் !!!

புறாவாக நீ பறந்து திரிந்தாய்
எங்கு சென்றாலும் திரும்பி இங்குதானே
வருவாய் என்றிருந்தேன் ...
ஆனால் இன்று நீ பறந்தது திரும்பிவருவதற்காக அல்ல ...
வேறொரு அடைக்கலத்தை தேர்வுசெய்ய என்று
நினைக்கவில்லை...

உன்னை தூக்கி வந்து மீண்டும்
தோள்மீது வைத்துகொள்ள ஆசைதான் ...
முடியவில்லையே !!!
உன்னை அங்கு மகிழ்ச்சியாக அல்லவா
கண்டுதொலைத்தேன் !!!

நான் உனக்காக தேக்கிவைத்த பாசமெல்லாம்
என்னுள் புற்றுநோயாய் மாறிவிட ...
பரண்மீது எறிந்துவிடலாம்
என்றுதான் நினைத்திருந்தேன்
ஆனால் தூக்கியெறிய அது காய்ந்த சருகல்ல ...
என்றும் அழியாத நட்பு(பூ)...

என்றாவது ஒருநாள் ...

உன் தோட்டத்தின் மலர்கள் அனைத்தும் வாடிபோக நேர்ந்தாலும்...
கலங்காதே...திரும்பிப்பார்...அன்றும்
உனக்க வாடாமல் காத்திருக்கும் என் நட்பு(பூ) ...

ஏன் பிதற்றுகிறார்கள் !!!
காதல் தோல்வியில் மட்டும்தான் தாடிவைத்த கவிஞர்கள் தோன்றுகிறார்களா என்ன ??? இதோ !!!
நட்பின் தோல்வியால் உருவான
முதல் தாடியில்லா கவிஞனின் கண்ணீர் படலமே இது !!!!

- அமலா

எழுதியவர் : amala (13-Aug-11, 12:26 am)
பார்வை : 844

மேலே