என் தோழிக்கும் எனக்குமான முதல் சந்திப்பு
எங்கள் நட்பின் முகவரி கவிதையில்
துவக்கம் கருத்துக்கள் எங்கள் உணர்வை
பரிமாறும் கடிதங்கள் நான் ஜெய்க்க
அவள் யோசனைகள் மட்டுமல்ல
சில தலைப்புகளும் உதவும் அவளைபோல்
இன்றைய பொழுதில் தான் உண்டு
தன வேலை உண்டு என்று கடக்கும்
தினங்களில் பாசமாய் எனக்காய்
வாழும் ஒரு ஜீவன் பாசத்தை உணர்ந்தேன்
அவள் தோழமையில் நான்
உணர்ந்தது தோழமை மட்டுமல்ல
இன்னொரு தாய்மையும்
குறுஞ்செய்தியாய் காலை வணக்கத்துடன்
விடியும் என் பொழுதுகளும்
என்ன காலை உணவு மதியம் என்ன உணவு
என்று அக்கறை கொண்ட நலன் விசாரிப்பில்
சில நேரங்களில் நான் என்னையே
மறந்ததுண்டு பனி முடிந்து இரவு
வீடு நான் திரும்பும் வரை தொடரும்
அவள் அக்கறை என் இன்னொரு
நிழலாய் எத்தனை பாசம் கொண்ட
தோழியை கண்டதில்லை எனும்போதே
நெஞ்சுக்குள் ஒரு நெருடல்
நட்பின் நிமித்தமாய் சந்திக்க எண்ணி
சந்திக்கும் நாளும் தீர்மானித்து
சந்திக்கும் நொடியில் நான் நிஜமாய்
தொலைந்தேன் தொலைந்ததை மறைத்தேன்
தொலையாதது போல் நடித்தேன்
நேரிலும் அதே அன்பு கலந்த புன்னகை
எதற்கு அவளுக்கு பொன்னில் நகை
அலைபேசியில் எள்ளி நகையாடுவாள்
அதுபோலும் நேரில் பேசுவாள்
என்ற என் நினைவு கனவாய் போனது
புன்னகையோடு அவள் உதடுகள்
நின்று போனது ஏமாற்றம் எனக்கு
வந்து போனது இருந்தும் மனம் அவளை
நேரில் கண்ட மகிழ்ச்சியால் அந்த
வருத்தம் மறைந்தும் போனது
சில நொடிகள்தான் என்னை அவளும்
அவளை நானும் பார்த்து கொண்டது
அதற்குள் எங்கள் நட்பு எத்தனை ஜென்மம்
கடந்து போனது நட்புக்குள்ளும்
பூக்கள் பூக்கும் அதிசயம் என் மனம்
நட்பில் லயித்தது புது சுகம்
மீண்டும் ஒரு வாய்ப்பு வருமா
அவளை சந்திக்கும் நிமிடம் தருமா
என்று ஏங்கி விட்டேன் கனவோடு
நட்பின் தோளில் தூங்கி விட்டேன்