திருக்குற்றால அழகு

மலைவரு மேகம் வெயிலாற்றும்;
=மந்திகள் மகவின் பசியாற்றும்;
குலையுடன் வாழைகள் தலையாட்டும்;
=குழந்தைகள் அருவியில் தலைகூட்டும்;
கலையெழில் பைம்பொழில் கவினூட்டும்;
=கருமலை திராவிடர் புகழ்காட்டும்;
சிலைகவிழ்ந் தங்கே எழிலூட்டும்;
=சீர்குற் றாலம் மகிழ்வூட்டும்!

எழுதியவர் : எசேக்கியேல் காளியப்பன்... (5-Jun-18, 6:37 am)
பார்வை : 44

மேலே