வஞ்சகர் நினைத்தழியும் வாழ்வு

[தூத்துக்குடிப் போராட்டக்காரர்களுக்குச் சமர்ப்பணம்}

கொஞ்சமோ உளதுயர்கள் கோடிகள் எவருக்கோ!
வஞ்சமோ எமக்கான வாய்கிடும் அரிசியடி!
தஞ்சமென் றாரும் இலை!

பஞ்சையாய் இருந்தழிவோம்! பரமனும் கைவிட்டான்!
அஞ்சலே வாழ்க்கையடி! ஆறுதல் சாவாமோ?
சஞ்சலம் ஒன்றோ சகி!

குஞ்சுகள் பிறந்ததுமே குறைகளே கண்டபலன்!
மிஞ்சுமோ இவையெனவே மேனியுள் நடுங்குதடி!
செஞ்சடை யானோ சிலை!
===== ======

எழுதியவர் : எசேக்கியேல் காளியப்பன் (5-Jun-18, 6:47 am)
பார்வை : 35

மேலே