நம்பிக்கை

முகத்திரையாவும் கிழிந்திடுமே
நித்திரையில் இருக்கையிலே
மனத்திரையாவும் களைந்திடுமே
மனம்நெகிழ்ந் திருக்கையிலே
இலைகள்யாவும் உதிர்ந்திடுமே
காற்றுமிக வீசுகையிலே
துயரம்யாவும் உதிராது
நம்பிக்கை இழக்கையிலே.

எழுதியவர் : க.கார்த்திக் ரத்தினவேல் (5-Jun-18, 4:12 pm)
பார்வை : 1336

மேலே