இருளும்,ஒளியும்

இரவின் இருளை
ஓட்டவந்தது நிலவு
குளிரும் தந்து ,இருளில்
ஒளியாய் நிலவிட
காதலர் உள்ளம் மகிழ
இரவைப் போக்க வந்தது
காலை கதிரவனாய்
இருளே இல்லாத ஒளியைப் பரப்பி
மண்ணில் எல்லாம் மகிழ்ந்திட
மனதின் இருளையும் போக்கி
இரவில் இருளில் ஓய்ந்திட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Jun-18, 3:49 pm)
பார்வை : 130

மேலே