வானம் ஏன் அழுகிறது

வானம் ஏன் அழுகிறது?
இருளில்
வானம்
அழுது கொண்டிருக்கிறது !
சூரியன்
மிரட்டி விட்டு சென்றிருக்கிறானாம்
நான் வரும்போது
உன்னுடைய
வாரிசுகள் கண்ணுக்கு
தெரியக்கூடாது
எப்பொழுதும் தெரிவதில்லையே
இப்பொழுது மட்டும்
ஏன் இந்த கோபம்?
நேற்று அவன் வந்த
பொழுது நிலாவும்,
நட்சத்திரங்களும்
கண்ணுக்கு
தெரிந்து விட்டதாம்
அவன் வெளிச்சத்தையும்
மீறி கண்ணுக்கு
தெரிவதால்
கோபமா
பொறாமையா?