இயற்கை---செந்தாழம் பூவில்--மெட்டில்

செந்தாழம் பூவில் மெட்டு :

இயற்கை :


பல்லவி :

தேன்சிந்தும் பூக்கள் வண்டோடு சேர்ந்து இன்பத்தில் ஆடுதிங்கே... (2)
சங்கீத சாரல் வீசுதிங்கே...
சந்தோச ராகம் கேட்குதிங்கே...
பூமிக்கே சொர்க்கந்தான்... (2)


சரணம் 1 :

மலையில் தவழும் மேகக் கூட்டம் ஆடையாக மாறுதே...
விடியும் பொழுதில் பொட்டு வைத்து கதிரும் வந்து போகுதே...
வாடும் பயிர் கூடும் முகில் வான் மழையினைத் தூவுது...
ஆடும் மயில் தோகை தந்து நாணம் கொண்டு ஓடுது...
ஓடைகள் நதிகள் பாடும் குயில்கள்...

தேன்சிந்தும்...


சரணம் 2 :

அலைகள் மிதக்கும் நீலக் கடலில் நுரையின் வெண்மை ஈர்க்குதே...
உலையாய் கொதிக்கும் பாலை அங்கும் மலரைக் கள்ளி ஈன்றதே...
வெள்ளை நிலா கொள்ளை எழில் ஆழ் கடல்மேல் நீந்தவே...
காற்றும் புது கோலம் ஒன்றை பாலை மண்ணில் தீட்டுதே...
பருவம் மாற பசுமை மாறும்...

தேன்சிந்தும்...


சரணம் 3 :

வயலில் அசையும் விளைந்த நெல்லை பறவை கொத்த சூழுதே...
இலையின் நரம்பில் இசையை மீட்ட பனியும் மெல்ல வீழுதே...
காட்டில் எழும் மூங்கில் பாட்டில் மான் புலிகள் தூங்குது...
புல்லை விட நெல்லைத் தின்ன ஆடும் மாடும் ஏங்குது...
அழகே அழகே இப்புவி தோற்றம்...

தேன்சிந்தும்...

எழுதியவர் : இதயம் விஜய் (6-Jun-18, 11:47 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 405

மேலே