என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி

காதலியே இதமான முத்தங்களோடு
உன்னில் நன் கலந்திட விழுகிறேன்...
சொல்லி விடு நாம் ஈன்றெடுத்த
பசுமை பிள்ளைகளிடம் நான்
நான் வருகையில் வண்ண முகங்களோடு
மலர்ந்து இருக்கட்டும்....
உணர்த்திவிடு நாம் தத்தெடுத்த
மானிட செல்வங்களிடம் நான்
விழுகையில் உன்னில் என்னை
சேமித்து வைக்கட்டும்....!!!!!!

~இப்படிக்கு~
மழைத்துளி

எழுதியவர் : லீலா லோகிசௌமி (6-Jun-18, 11:30 am)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
பார்வை : 143

மேலே